ஆரி கேட்டப்பவே கொடுத்திருக்கலாம்ல ஆஜீத்.. கடைசியா ஜித்தனுக்கும் நிஷாவுக்கும் பஞ்சாயத்து ஆகிடுச்சு!
சென்னை: ஜித்தன் ரமேஷை நம்பிக்கை மோசடி செய்து விட்டு, ஆஜீத்துக்கு ஃப்ரீ பாஸை கொடுத்த பஞ்சாயத்தில் கடைசியாக நிஷா ரமேஷிடம் மன்னிப்பு கேட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறாமல் இருக்க ஆஜீத்துக்கு கிடைத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை அவருக்கு பத்திரப்படுத்தவே தெரியவில்லை.
பாலாஜி முருகதாஸ் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்திடம் திருப்பிக் கொடுத்த பின்னர், நடந்த சம்பவங்கள் 11வது நாள் எபிசோடின் உச்சகட்ட என்டர்டெயின்மென்ட்.

பிக்பாஸ் வீட்டின் சமுத்திரகனி
ஆரம்பத்தில் இருந்தே ஆஜீத்துக்கு நடிகர் ஆரி, சமுத்திரகனி போல அட்வைஸ் பண்ணுவது பிடிக்கவில்லை. இந்நிலையில், 11வது நாள் எபிசோடில், பாலாஜி முருகதாஸ் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்துக்கு திருப்பி தந்த பிறகு, ஜித்தன் ரமேஷ் பார்க்க கேட்டார். கையில் கொடுக்காமல் ஆஜீத் அப்படியே காட்டினான். பின்னர், ஆரி, பார்த்துட்டு தரேன் டா என கேட்ட போது, கொடுக்க மறுத்த ஆஜீத்தை பார்த்து சனம் ஷெட்டி நம்பிக்கையில்லை என பற்றவைத்தார்.

ஆஜீத்தை அழ வைத்த ஜித்தன் ரமேஷ்
நடிகர் ஆரி, சும்மா பார்த்துட்டு தரேன்னு சொன்னதை மதிக்காமல், ஆஜீத் ஆரியிடம் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை கொடுக்காத நிலையில், உன் கிட்ட இருந்து எடுக்க முடியாதா என ஆரி கோபப்பட்டார். ஜித்தன் ரமேஷ் அசால்ட்டா ஆஜீத்தின் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து ஆரியிடம் கொடுத்து ஆஜீத்தை அழ விட்டார்.

நிஷா செய்த சில்மிஷம்
ஆஜீத்திடம் இருந்து அந்த அலாவுதீன் பூதத்தை ரமேஷ் ஆட்டைய போட்டதும், ரியோ கைதட்டி பாராட்டினார். ஒழுங்கா முன்னாடியே கொடுத்திருந்தா பார்த்துட்டு தந்திருப்பாருல என்றார். ஆரி அந்த டிக்கெட்டை பார்த்து விட்டு, அதை எடுத்த ரமேஷிடமே தர, சும்மா இல்லாமல், அறந்தாங்கி நிஷா ரமேஷிடம் இருந்து வாங்கி ஆஜீத்துக்கு தந்து ரமேஷை அப்செட் ஆக்கினார்.

நாங்க கெட்டவங்களா
நிஷா நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு, உங்கிட்ட பேசமாட்டேன் என ரமேஷ் கோபித்துக் கொள்ள, அப்ப நாங்க என்ன அவனுக்கு கெட்டவங்களா என ஆரியும் நிஷாவை பார்த்து கேள்வி கேட்டு விளாசினார். நிஷா அய்யய்யோ பெரிய தப்பு பண்ணிட்டோமேன்னு, அழுது புலம்ப ஆரம்பித்தார்.

மன்னிப்பு கேட்ட நிஷா
பின்னர், நிஷாவிடம் அந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத் கொடுக்க, அதை மன்னிப்பு கேட்டுவிட்டு, நிஷா ஜித்தன் ரமேஷிடம் கொடுத்தார். பின்னர், ரமேஷ் அதை வாங்கிக் கொண்டு, ஆரியிடம் கொடுக்க, ஆஜீத்துக்கு ஆரி அந்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸை கொடுத்தார்.

நக்கல் புடிச்ச ஆஜீத்
அங்க நடந்த அத்தனை பிரச்சனைக்கும் காரணமான ஆஜீத், ஆரி மறுபடியும் ஃப்ரீ பாஸை நிஷாவிடம் கொடுக்க சொல்லியும் கேட்கவில்லை. பின்னர், ரமேஷிடம் இருந்து பெற்றுக் கொண்டு, ஆரி கொடுக்கும் போதும், அதை அவரிடம் இருந்து வாங்க ஆஜீத் மறுத்தார். ஆரி ஆஜீத்துக்கு புரிய வைத்து அவருக்கு அந்த பாஸை வழங்கியதும், மற்ற ஹவுஸ்மேட்கள் கைதட்டி பாராட்டினார்கள். கடைசி வரைக்கும் ஆஜீத்துக்கும் ஆரிக்கும் தான் பஞ்சாயத்தே போல!

அழுதா மூஞ்ச பார்க்க முடியல
நிஷாவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட ஜித்தன் ரமேஷ், அந்த பையனுக்கு ஒரு விஷயத்தை சொல்லித் தரத்தானே பண்ணோம். நான் என்ன கெட்டவனா, அதை எடுத்துப்பேனா என கேட்டதும் அழத் தொடங்கிய நிஷாவை ரமேஷ் சமாதானப்படுத்தினார். இறுதியில், அழுதா மூஞ்சை பார்க்க முடியல என ரமேஷ் சொல்ல, மேம் சேம் டைலாக் மேம் என ரேகாவிடம் புலம்பி கலகலக்க வைத்தார் நிஷா.


Click it and Unblock the Notifications











