Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
போகும் போது பாலாவுக்கு ஆஜீத் சொன்ன ‘நச்’ அட்வைஸ்.. ஆரிக்கு சூப்பர் பாராட்டு.. வாழ்த்திய கமல்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து 91வது நாளில் ஆஜித் வெளியேறியுள்ளார்.
ரம்யாவா? ஆஜீத்தா? என கடைசி நேர டென்ஷனை கிளப்பி, கடைசியில் ஆஜீத்தை எவிக்ட் பண்ணார் கமல்.
போகும் போது பாலாவுக்கு நச்சென ஆஜீத் சொன்ன அட்வைஸ் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.
குட்பை ஜூக்பாக்ஸ்
இந்த பிக் பாஸ் சீசனில் வேல்முருகன், ஆஜீத் மற்றும் சுசித்ரா என மூன்று பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பத்திலேயே வேல்முருகனும், வந்த இரு வாரத்திலேயே சுச்சியும் வெளியேறிய நிலையில், 90 நாட்களாக ரசிகர்களுக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் ஜூக்பாக்ஸாக இருந்த ஆஜீத் ஒருவழியாக வெளியேறி உள்ளார்.
திகில் பாண்டியன்
டைட்டில் வின்னர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்பட்ட ரம்யா பாண்டியன், இந்த வாரம் வெளியே கிளம்பிடுவோமான்னு கடைசி வரை திகில் அடைந்த பாண்டியனாகவே மாறிவிட்டார். ஆரியை பகைத்துக் கொண்டால், அவங்க ஆர்மியினர் என்ன செய்வாங்கன்னு ரம்யாவுக்கு இந்நேரம் புரிந்திருக்கும் என ஆரி ஆர்மியினர் ரம்யாவை கலாய்த்து வருகின்றனர்.
பாலாவுக்கு ‘நச்’ அட்வைஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது பாலாவுக்கு நச்சென ஒரு அட்வைஸை கொடுத்தார் ஆஜீத். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை ஆஜீத்தை ஒரு அல்லக்கையாகவே பயன்படுத்திய பாலா, ஒரு முறை கூட அவருக்கு ஒரு நல்ல அட்வைஸ் கொடுத்ததே இல்லை என ஆஜீத்தின் அம்மாவே சொல்லி இருந்தனர். இந்நிலையில், ஆஜீத் கிளம்பும் போது, "பார்த்து வார்த்தையை விடுங்க" என பாலாவுக்கு புத்தி புகட்டி சென்றார்.
நெத்தியடியா பேசுங்க
கமலிடம் வந்து பாராட்டுக்களை பெற்று தனது ஏவியை பார்த்து ரசித்து விட்டு ஹவுஸ்மேட்களிடம் பேசிய ஆஜீத், ரம்யா அக்காவுக்கு, பின்னாடி பேசாதீங்க, எதுவா இருந்தாலும் ஆரி சொல்வதை போல நேரா நெத்தியடியாகவே பேசுங்க என பிக் பாஸ் காலர் சொன்ன அதே டிப்ஸை கொடுத்து ரம்யாவை மேலும் உசுப்பேத்தி விட்டு சென்றுள்ளார்.
என்னை ஓப்பன் பண்ணிட்டீங்க
ஆரம்பத்தில் இருந்து ஆஜீத்தை ஆரிக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால், அவர் சொல்லும் அட்வைஸ் எதையும் ஏன் கேட்க வேண்டும் என்கிற மனநிலையில், பலமுறை அவரை அவமதித்து வந்தார் ஆஜீத். இந்நிலையில், அகம் டிவி வழியே ஆரியை பார்த்து பேசிய ஆஜீத், நீங்க சொன்ன அட்வைஸை நான் கேட்கவே இல்லை.
ஆரிக்கு பாராட்டு
கடைசியா இந்த வாரம் கேட்டேன். ஓப்பன் அப் ஆனேன். அதற்கு ரொம்ப நன்றி! உங்களுக்கு நான் என்ன சொல்றது, சூப்பரா விளையாடுறீங்க, அப்படியே விளையாடுங்க எனக் கூறிவிட்டு சோம், கேபி, ரியோ, ஷிவானிக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு வெளியேறினார் ஆஜீத்.
கமல் பாராட்டு
பொதுவா பாடகர்கள் எல்லாம் அதிகமாக பேச மாட்டாங்க, பாடும் நேரம் வந்தால், அவர்களை பிடிக்க முடியாது. இது உங்களுக்கான பிளாட்ஃபார்மாக கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த 90 நாட்களில் உங்களுக்கு கிடைத்திருக்கும் புகழ், வெளியே போனால் தெரியும். ஆஜீத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என்றார்.