கேவலமா ஆடுறாங்க.. நான் அப்படியே படுத்துடுவேன்.. கேபியால் டென்ஷனான ஆஜீத்.. ரொம்ப அப்செட் ஆகிட்டார்!

சென்னை: பஸர் அடித்த அடுத்த நொடியே ஆஜீத்தின் முட்டையை கேபி மற்றும் ரம்யா தொட்ட நிலையில் ரொம்பவே டென்ஷனாகிட்டார் ஆஜீத்.

பாலா, ஆரி, ரம்யா, சோமசேகர், ஆஜீத் உள்ளிட்டோர் இதுவரை கோழிகளாக தங்க முட்டைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்க முட்டையை கோழியே நரியிடம் தூக்கிக் கொடுப்பது போன்ற டீலிங் ரொம்ப தப்பானது என ரியோ, சோமுக்கு அட்வைஸும் செய்தார்.

ஆஜீத் அவுட்

ஆஜீத் அவுட்

பஸர் அடித்த அடுத்த நொடியே ஆஜீத்தின் முட்டையை கேபி தொட்டு விட்டார். அருகே இருந்த ரம்யா பாண்டியனும் முட்டையை தொட்டு விட, ரொம்பவே ஆஜீத் கோபமாகி விட்டார். உடனே, இதுக்கு எதுக்கு கேம் ஆடணும் என கத்தி கூச்சலிட ஆரம்பித்து விட்டார். கேபி சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

முட்டையை கைப்பற்றிய கேபி

முட்டையை கைப்பற்றிய கேபி

பிக் பாஸ் நான் ஆஜீத்தின் தங்க முட்டையை தொட்டுட்டேன் என அதை எடுத்து அப்படியே கேமராவுக்கு முன்பாக காட்டி தான் ஜெயித்து விட்டேன் என்பதை பதிவு செய்தார். ஆனால், கேபி அதிரடியாக முட்டையை தொட்டதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆஜீத், அவர் பாலாவுடன் போட்ட ஒப்பந்தத்தை கேபி மீறியதால் ரொம்பவே அப்செட் ஆகிப்போனார்.

அப்படியே படுத்துப்பேன்

அப்படியே படுத்துப்பேன்

கொஞ்சம் கூட டைம் கொடுக்காமல், கிட்ட நின்று பேசிக் கொண்டிருந்த நிலையில், பஸர் அடித்ததும் கேபி தனது முட்டையை தொட்டதால் ஆஜீத் கோபப்பட்டார். நான் நரியாக மாறிவிட்டால், அப்படியே பக்கத்திலேயே படுத்துப்பேன். பஸர் அடித்ததும் தொட்டு அவுட் ஆக்கிவிடுவேன் என ஒட்டுமொத்த கடுப்பையும் வெளிப்படுத்தினார்.

கேவலமா ஆடுறாங்க

கேவலமா ஆடுறாங்க

மேலும், கேவலமா ஆடுறாங்க, அப்புறம் எதுக்கு டீல் போடுறதெல்லாம். அப்படியே விளையாட வேண்டியது தானே, என ஆஜீத் கத்த, அருகே வந்த பாலா, அப்படின்னா நான் உடனே டைவ் அடிச்சு முட்டையை தொட்டுட்டு போயிட்டே இருப்பேன் என கமெண்ட் செய்தார். ஆஜீத்திடம் அர்ச்சனா எனக்கும் அப்படித் தான் நடக்குது என தனது ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்தார்.

குசும்பு கேபி

குசும்பு கேபி

சைலன்ட்டா சோலோவா கேம் ஆடி கேபி ஜெயித்த நிலையில், அப்செட்டான ஆஜீத்தை கொஞ்சம் கூட சமாதானப்படுத்தாமல், சிரித்து தனது குசும்புத்தனத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியது. இந்த வாரம், யாரெல்லாம் ஜோடியா விளையாடினாங்களோ அவங்களுக்கு உள்ளே அடிச்சிப்பாங்க போல தெரியுது என்றும் கணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X