தங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது ஆஜீத்.. கலாய்த்தது ரம்யா!

சென்னை: தங்கச்சின்னு ஏன் கூப்பிடுற என பாலாவிடம் ஷிவானி ரகசியமாக கேட்டதாகவும், பின்னர் போடா லூசு என பாலாவை ஷிவானி திட்டியதாகவும் ரம்யா மற்றும் அனிதாவிடம் ஆஜீத் பேசி ஷிவானியை கலாய்த்துக் கொண்டிருந்தார்.

ரம்யா மறுபடியும் ஷிவானி போலவே நடித்து அவரை கலாய்த்தார்.

அருகில் பாலாவுடன் கையை பிடித்துக் கொண்டு ரொமான்ஸ் செய்து வந்த ஷிவானி, ரம்யாலாம் என்ன கலாய்க்கிறாங்களே என அவரிடமே செல்லமாக சண்டை பிடித்தார்.

தங்கச்சின்னு கூப்பிட்ட பாலா

தங்கச்சின்னு கூப்பிட்ட பாலா

ரம்யா மற்றும் அனிதாவுடன் பேசிக் கொண்டிருந்த ஆஜீத், எனக்கு கேட்காதுன்னு நினைச்சிக்கிட்டு, பாலா ரகசியமா தங்கச்சின்னு ஷிவானியை கூப்பிட்டான். ஆனால், அது எனக்கு நல்லாவே கேட்டுடுச்சு. உடனே ஷிவானி தங்கச்சின்னு ஏன் கூப்பிடுற என பாலாவிடம் முறைத்துக் கொண்டார் என ஷிவானி மாதிரியே இமிடேட் பண்ணி காண்பித்தார் ஆஜீத்.

போடா லூசு

போடா லூசு

தங்கச்சின்னு பாலா கூப்பிட்டதும் கடுப்பான ஷிவானி நாராயணன், பாலாஜி முருகதாஸை பார்த்து ‘போடா லூசு' என செல்லமாக மெல்லமாக திட்டியதும் என் காதில் விழுந்து விட்டது. அப்புறம் நாம எதுக்கு இங்க நிக்கணும்னு வராத புல் அப்ஸ் பண்ணப் போறேன்னு கிளம்பிட்டேன். கோவமா கிளம்பிட்டியா என ரம்யாவும் சகட்டு மேனிக்கு கலாய்த்தார்.

ஷிவானி போல நடித்து

ஷிவானி போல நடித்து

ஏற்கனவே சம்யுக்தா மற்றும் ஆஜீத் இருக்கும் போது, படுக்கையறையில் பாலா மாமா.. பாலா மாமா என ஷிவானி பின்னாடியே சுத்துகிறார் என ரம்யா நடித்து காட்டி கலாய்த்த நிலையில், நீங்களும் ஏதாவது பண்ணுங்க என ஆஜீத் கேட்க, உடனே ஷிவானி பேசுவது போலவும், ஷிவானி முறைத்துப் பார்ப்பது போலவும் நடித்து கலாய்க்க தொடங்கினார்.

கைகளை பிடித்து ரொமான்ஸ்

கைகளை பிடித்து ரொமான்ஸ்

பக்கத்திலே அமர்ந்திருந்த பாலாவுக்கும் ஷிவானிக்கும் அவங்களை தான் ஓட்டுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு, ஷிவானி ரம்யா பக்கம் வந்தார். கூடவே எழுந்து வந்த பாலா, ஷிவானியின் கைகளை எல்லாம் பிடித்துக் கொண்டும், அவரை சுற்றி வளைத்துக் கொண்டும், தனியாக ரொமான்ஸை பண்ணிக் கொண்டு இருந்தது ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றியது.

என்ன கருமமோ

என்ன கருமமோ

பாலாவுக்கும் எனக்கும் லவ் இல்லை அன்பு தான் என்று ஷிவானியும், ஷிவானியை தங்கச்சின்னு கூப்பிட்டு விட்டு, இப்படி லவ்வரிடம் பண்ணுவதை எல்லாம் ஷிவானியிடம் பண்ணுகிறாரே என ரசிகர்கள் ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டனர். என்ன அன்போ, என்ன கருமமோ என கழுவி ஊற்றி வருகின்றனர்.

எக்ஸ் க்யூஸ் மி

எக்ஸ் க்யூஸ் மி

எக்ஸ் க்யூஸ் மி என ஷிவானி பேசுவது போலவே ரம்யா பாண்டியன் பேசி அவர் முன்னாடியே அவரை கலாய்த்தது சிறப்பு. பாலாவும், அப்படி இல்லை கொஞ்சம் கேப் விட்டு சொல்லணும் என ஷிவானியை ரம்யாவுடன் சேர்ந்து கொண்டு ஓட்ட ஆரம்பித்தார். ரம்யாலாம் என்னை கலாய்க்குதே, எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா என ஷிவானி ரம்யாவை அடித்து விளையாட ஆரம்பித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X