For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டியேப்பா.. குட்டி ஜோசியர் ஆஜீத்.. தாத்தா தான் இந்த வாரம் அவுட்டாம்!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டின் மரண மாஸ் மொட்டை தாத்தா தான் இந்த வாரம் வெளியே போவார் என குட்டி ஜோசியர் ஆஜீத் கணித்துள்ளார்.

  உங்கிட்ட அப்புறம் தனியா வந்து ஜோசியம் கேட்கிறேன் என தாத்தா சொல்ல, அப்பவே பொசுக்குன்னு சொல்லி அவர் மனதை சுக்கு நூறாக ஆஜீத் உடைத்து விட்டார்.

  எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வச்சுக்கிட்டு நீ பண்ற ஆட்டம் இருக்கேன்னு பிக் பாஸ் ரசிகர்களும் ஆஜீத் மீது கொஞ்சம் இரிடேட் ஆகி உள்ளனர்.

  ஜித்தன் ரமேஷுக்கு பர்த்டே.. அகம் டிவி வழியே வாழ்த்து சொன்ன ஜீவா.. லொள்ளு சபா மனோகர் வேற லெவல்!

  அஜித் பாட்டுக்கு

  அஜித் பாட்டுக்கு

  தல அஜித்தின் ஆளுமா டோலுமா பாடலுக்கு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் லேட்டஸ்ட் எபிசோடில் இறங்கி செம குத்து குத்தி டான்ஸ் ஆடினர். சனம் ஷெட்டி, ஷிவானி, ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், கேபி வழக்கம் போல இறங்கி ரொம்ப நல்லாவே ஆடி ரசிகர்கள் கண்களுக்கு விருந்து கொடுத்தனர்.

  குட்டி ஜோசியர்

  குட்டி ஜோசியர்

  பிக் பாஸ் தமிழ் 4 வீட்டில் புதுசா இப்போ குட்டி ஜோசியர் ஒருவர் முளைத்துள்ளார். அது வேற யாரும் இல்லை நம்ம சுட்டிக் குழந்தை ஆஜீத் தான். சூப்பர் சிங்கராக இருந்தவர் திடீரென குட்டி ஜோசியராக மாறவும் ஒரு சூப்பரான காரணம் இருக்கு, அதுவும் இந்த எபிசோடில் சுரேஷ் தாத்தாவுக்கு சொன்ன ஜோசியத்தால் தெரிந்து விட்டது.

  ரேகா தான் வெளியே போவாங்க

  ரேகா தான் வெளியே போவாங்க

  டைனிங் ஏரியாவில், நீ ஜோசியம்லாம் சொல்வியான்னுன் கேட்ட சுரேஷ் தாத்தாவிடம், யார் சொன்னா என ஆஜீத் கேட்க, சம்யுக்தா தான் சொன்னாங்க, எனக்கு அப்புறம் சொல்லு, நான் உங்கிட்ட கேக்குறேன் என்றார். எதை பத்தி, ஓ எவிக்‌ஷன் பத்தியா, ஆமாம்.. போன வாரம் ரேகா தான் போவாங்கன்னு யாருமே எதிர்பார்க்கல.. ஆனால், நீ தான் கரெக்ட்டா சொன்ன என சுரேஷ் தாத்தா சம்யுக்தா சொன்னாங்கன்னு சொன்னார்.

  நான் தான்

  நான் தான்

  உடனே அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலாஜி முருகதாஸ், இந்த வாரம் நான் தான் வெளியே போவேன், அது எனக்கு கன்ஃபார்மா தெரியும் என்றார். உடனே ஆஜீத், நீங்க போக மாட்டீங்க என சொன்னார். பாலா போக மாட்டான்னு நானே சொல்வேன் என சுரேஷ் தாத்தா அவரும் ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்.

  தாத்தாவுக்கு ஆப்பு

  தாத்தாவுக்கு ஆப்பு

  உடனே சுரேஷ் தாத்தாவை பார்த்து நம்ம பிக் பாஸ் வீட்டின் குட்டி ஜோசியர் ஆஜீத், நீங்க தான் இந்த வாரம் வெளியே போவீங்கன்னு சொன்னதும், மொட்டை பாஸுக்கு மூஞ்சியே மாறிடுச்சு, நானா, நானா என சந்திரமுகி ஜோதிகா மாதிரி கேட்டுட்டு, ரொம்ப தேங்க்ஸ் பா.. என கொஞ்சம் கடுப்பாகவே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

  Bigg Boss Day 18 Highlights • அர்ச்சனா Second பிக் பாஸ் போல? | Bigg Boss 4 Tamil
  சாப்பிட்டுட்டு சிவனேன்னு இருந்திருக்கலாம்

  சாப்பிட்டுட்டு சிவனேன்னு இருந்திருக்கலாம்

  வழக்கம் போல ஆஜீத், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு சாப்பிட்டுட்டு சிவனேன்னு இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு, ஜோசியம் சொல்றேன், நீங்க தான் வெளியே போவீங்கன்னு சொல்லி, மொட்டை தாத்தாவே ஆரம்பத்திலேயே அப்செட் பண்ணதும். 16வது இடத்திற்கு அவரே முன்னாடி போய் நின்று கொண்டார். ஆஜீத் சொல்லும் ஆரூடம் பலிக்குதா? இல்லை இவரும் டூபாக்கூர் ஜோசியரா? என்று இந்த வாரம் தெரிந்து விடும்.

  English summary
  Aajeedh predicts Suresh Chakaravarthy will exit from Bigg Boss house this week. Already he predicts Rekha will eliminate from big boss house last week.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X