Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
- Automobiles குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- News பாதி பாலத்தை காணோம்.. சென்னையில் இனி அந்த சைடு கூட போகாதீங்க சார்.. பரபரக்கும் இடிப்பு பணி
- Technology விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
பாலாஜிக்கு எதிராய் ட்ரிகர் செய்த ரியோ.. மாஸ் காட்டிய ஆஜித்.. வேற லெவல் ஹேண்ட்லிங்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கால் செண்டர் டாஸ்க்கில் பாலாஜிக்கு எதிராய் ரியோ ஆஜ்த்தை ட்ரிகர் செய்ய முயன்றார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் ரவுண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்றைய எபிசோடில் காலரான ரியோ கால் செண்டர் ஊழியரான ஆஜித்திடம் பேசினார்.
கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. இதுவும் வளர்ப்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சில ஃபேக்ட்ஸ்
அப்போது ஆஜித்தை பாட்டுப்பாட சொல்லி ஆரம்பித்தே ரியோ, இந்த பாட்டு இனிமையாக இருக்கே இதுக்கு என்ன காரணம் என்றார். அதற்கு சில ஃபேக்ட்ஸ் என்று பதிலளித்தார் ஆஜித். அதனைக் கேட்ட ரியோ இதையெல்லாம் நான் பொய் என்றால் என்ன சொல்வீர்கள் என்றார். அதற்கு சில ஃபேக்ட்ஸ்களை மறுக்க முடியாது என்றாரர் ஆஜித்.
எல்லாமே ஸ்ட்ரேட்டர்ஜி
தொடர்ந்து பேசிய ரியோ, எல்லாத்தையும் கேம்மாகவும் ஸ்ட்ரேட்டர்ஜியாகவும் பார்க்கும் அனிதா சனம் ஆகிய இருவருக்கும் இடையே அழகான ஃபிரண்ட்ஷிப் உள்ளது. அதை பார்க்க அழகாக உள்ளது என்றார். மேலும் இந்த வீட்டில் எல்லாமே ஸ்ட்ரேட்டர்ஜி, அன்பெல்லாம் ஸ்ட்ரேட்டர்ஜி என்று கூறுவது யார்? என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன ஆஜித் பாலாதான் என்றார்.
ஓப்பினியனாக வச்சா?
அதனை தொடர்ந்து பேசிய ரியோ, எல்லாத்தையும் ஸ்ட்ரேட்டர்ஜி என்று கூறும் பாலா, உங்களை தம்பி என்று சொல்லி உங்களுக்கு டிரெஸ், ஷு என் செட் பண்ணி கொடுக்கும் அந்த அன்பை ஸ்ரேட்டர்ஜி, அந்த அன்பு ஃபேக், அந்த கேர் ஃபேக் என இதை என் ஒப்பினியனாக வச்சா எப்படி இருக்கும் என்று கேட்கிறார்.
ரம்யா டென்ஷன்
அதற்கு அது வேற கேம் வேற என்று ஆஜித் சொல்ல, இதைத்தான் நாங்களும் சொல்றோம், எங்களோட கேம்னு வரும்போது நாங்க விளையாட்டாதான் பார்ப்போம் என்றார். ரியோ ஆஜித்துடன் பேசுவதை டிவியில் பார்த்த பார்த்த ரம்யா, பாலாவிடம் கேட்க வேண்டிய கேள்வியையெல்லாம் ஆஜித்திடம் கேட்கிறார் என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
நான் ஏன் பார்க்கக்கூடாது?
தொடர்ந்து பேசிய ஆஜித், நான் இந்த வீட்டுக்குள் வரும் போது யாருடைய அன்பையும் எதிர்பார்க்கக்கூடாது என்றுதான் வந்தேன் என்றார். ஆனால் சாமை பார்த்தால் அம்மா ஃபீல் வந்தது என்றும் ஆஜித் கூறினார். அதனைக் கேட்ட ரியோ நீங்க அம்மாவா பார்க்கும் போது, நான் ஏன் என் மாமியாரா பார்க்க கூடாது, பிரண்டா பார்க்க கூடாது என கேட்டார். அவங்க ஏன் ஒரு தம்பியா பார்க்க கூடாது என்றார்.
பாலாவின் அன்பால் பாதிப்பு
அதனைக்கேட்ட நிஷா அப்போவே அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து பேசிய ரியோ, அன்பை பரிமாறிக்கிறதுல என்ன தப்பு இருக்கு? பாலாவோட அன்பால யார் பாதிக்கப்பட்டாங்கன்னு தெரியுமா என்று கேட்ட ரியோ, அவரே பதிலையும் சொன்னார். அதாவது பாலாஜியின் சாம் காட்டிய அன்பால் சோம் பாதிக்கப்பட்டார் என்றார்.
காலை கட் செய்த ஆஜித்
தொடர்ந்து நீங்கள் சேஃப் கேம் ஆடுறீங்களா ஆஜித் என்றார். அதற்கு பதில் சொல்ல ஆஜித், நான் சேஃப் கேம் விளையாடினால் நாமினேஷன் வரை சென்று விட்டு எஸ்கேப்பாகியிருக்க மாட்டேன் என்றா. தொடர்ந்து பேசிய ஆஜித், நீங்க நாமினேஷன் ஆகனும்னு நினைக்கிறீங்களா என்றார்? அதற்கு ரியோ பதில் சொல்லும் போதே நீங்கள் நாமினேட் ஆகக்கூடாதுன்னு நினைக்கிறேன் என்று அவரது காலை கட் செய்தார்.
வெகு சிறப்பு 5 ஸ்டார்
ஆஜித்தின் இந்த செயலை பார்த்த ஹவுஸ்மேட்ஸ், அவரை சோ ஸ்வீட் என பாராட்டினர். தொடர்ந்து ரியோவிடம் என்னுடை பதில் எப்படி இருந்தது என்று கேட்டார் ஆஜித், அதற்கு வெகு சிறப்பு என்று கூறி 5 ஸ்டார்களை கொடுத்தார். ஆஜித் பேசியதும் அவர் நடந்து கொண்டதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.