twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிளாப்ஸ் போட வைத்த கிளாப் பட நடிகை...கொண்டாடும் ரசிகர்கள்

    |

    டெல்லி : தமிழ், தெலுங்கு, இந்தி பட நடிகையான ஆகன்ஷா சிங், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் கிளாப் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

    தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி உள்ள கிளாப் படத்தின் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். நாசர், பிரகாஷ்ராஜ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரிலேயே முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை.

     சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் தமிழ் சினிமா.. பிரபலங்கள் இரங்கல்! சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்.. சோகத்தில் தமிழ் சினிமா.. பிரபலங்கள் இரங்கல்!

    கவனத்தை ஈர்த்த கிளாப் ஹீரோயின்

    கவனத்தை ஈர்த்த கிளாப் ஹீரோயின்

    இந்நிலையில் தனது சொந்த ஊரான ஜெய்பூரில் காஃபே ஒன்றை திறந்துள்ளார் ஆகன்ஷா சிங். பல மொழி திரைடங்களில் நடித்துள்ள ஆகன்ஷா, தற்போது தொழிலதிபராகவும் மாறி உள்ளார். காஃபே திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து ரிப்பன் கட் பண்ண வைத்துள்ளது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

     கனவு நினைவானது

    கனவு நினைவானது

    இது பற்றி ஆகன்ஷா கூறுகையில், இதற்கு அதாரியா என பெயர் வைத்துள்ளோம். பகல், இரவு என அனைத்து நேரமும் சிறப்பான அனுபவத்தையும், அமைதியையும் தரும் வகையில் இதனை அழகாக வடிவமைத்துள்ளோம். இது எனது நீண்ட கால கனவு. தற்போது நினைவாகி உள்ளது சந்தோஷமாக உள்ளது.

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

    சமீபத்தில் எனது மைத்துனர் அபிஷேக் தான் இந்த ஐடியாவை கூறினார். உடனடியாக செயல்படுத்தி விட்டோம். குழந்தைகளின் முகத்தில் தெரியும் சிரிப்பை பார்க்கும் போது புது வித உணர்வு ஏற்படும். அதனால் தான் அவர்களை அழைத்து ரிப்பன் கட் பண்ண வைத்தோம். இந்த விழாவில் நாங்கள் நடனமாடி, மியூசிக்கல் சேர் விளையாடினோம் அவர்களுடன்.

    குழந்தைகளை உற்சாகப்படுத்திய நடிகை

    குழந்தைகளை உற்சாகப்படுத்திய நடிகை

    அவர்களுக்காக, அவர்களுக்கு பிடித்த நூடுல்ஸ், பிசா, ஐஸ்க்ரீம் போன்ற ஸ்பெஷல் மெனுவை தயார் செய்திருந்தோம். இந்த காஃபேயில் ஊஞ்சலும் அமைத்துள்ளோம். அவர்கள் அதில் என்ஜாய் செய்தனர். வானத்தில் பலூன்களை பறக்க விட்டபோது அப்படி ஒரு உற்சாகம். சிறப்பான தருணம் என்றார்.

    இங்கு தான் எனது உறவுகள்

    இங்கு தான் எனது உறவுகள்

    ஆகன்ஷாவின் உறவினர்கள் அனைவரும் ஜெய்பூரில் தான் உள்ளனர். வேலை தொடர்பாக பல இடங்களுக்கும் பயணம் செய்தாலும், என் மீது அன்பு அக்கறை கொண்டவர்கள் இங்கு தான் உள்ளனர். அதனால் தான் காஃபேவை இங்கு திறந்தேன் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Aakanksha Singh opens a cafe in Jaipur. The cafe was inaugurated in Jaipur on July 15 in the presence of a few kids from a city-based NGO.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X