Prtivi Shaw: நிச்சயதார்த்தம் நின்னுப்போச்சு.. ஆக்ரித்தி அகர்வாலை ஏமாற்றினாரா பிரபல கிரிக்கெட் வீரர்?

மும்பை: பாலிவுட் மாடல் அழகியும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சருமான ஆக்ரித்தி அகர்வால் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் தான் சந்தோஷமாக நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துக் கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், பிரித்வி ஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக மோசடி செய்து ஏமாற்றிவிட்டனர் என ஆக்ரித்தி போட்ட இன்ஸ்டா போஸ்ட்டும் பெரும் பரபரப்பை கூட்டியுள்ளது.

Aakriti Agarwal breakup with Cricketer Prithvi Shaw after Engagement

த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா, விஷால், மெஹ்ரின் பிர்சடா என பல பிரபலங்களுக்கு இதுபோல நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் திருமணம் நடந்த ரொம்பவே மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலிருந்து மீண்டு புது வாழ்க்கையையும் அவர்கள் தேர்வு செய்தனர்.

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்: சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துக் கொண்டு சோஷியல் மீடியா பிரபலமாக வலம் வருபவர் தான் ஆக்ரித்தி அகர்வால். பிரபல கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் ஆக்ரித்தி அகர்வால் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் அதிகாரப்பூர்வமாக நிச்சயம் செய்துக் கொண்டனர். கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்

என்னை ஏமாத்திட்டாரு: "நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன், இருந்தாலும் நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. வாழ்க்கையின் ஒரு படி மேலே சென்ற பிறகும் இது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எல்லா வதந்திகளும் உண்மைதான். சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி நீங்கள் பார்ப்பது அனைத்தும் உண்மைதான்" என்று இன்ஸ்டாகிராமில் ஆக்ரித்தி பதிவிட்ட போஸ்ட் பாலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இருவரும் தற்போது பிரிந்து விட்டனர் என்றும் திருமணம் நின்று போனது என்றும் கூறி வருகின்றனர்.

மொத்தமா முடிச்சி விட்டாங்க: தொடர்ந்து மறைமுகமாக பிரித்வி ஷா தான் தன்னை ஏமாற்றினார் என்பதை சமூக வலைதளங்கள் மூலமாக சொல்லி வரும் அக்ரித்தி அகர்வால் ஏன் வெளிப்படையாக என்ன நடந்தது என்பதை சொல்லவில்லை என்கிற கேள்வியை அவரது ஃபாலோயர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், திருமணத்துக்கு முன்பே தெரிந்துவிட்டது நல்ல விஷயம் தான் என்றும் தப்பித்து விட்டீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். பிரித்வி ஷா மற்றும் ஆக்ரித்தி இருவரும் இதுவரை இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X