வைபம்,முனீஷ்காந்த் இணைந்து கலக்கும் ஆலம்பனா... முதல் பாடல் வெளியாகிறது !

சென்னை : வைபவ், பார்வதி நாயர் நடிக்கும் ஆலம்பனா திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது.

கதாநாயகனாக வைபவும், அலாவுதீன் கதாபாத்திரத்தின் பூதமாக காமெடி நடிகர் முனீஷ்காந்த் நடித்துள்ளார்.

நகைச்சுவை திரைப்படமான இப்படத்தை பாரி கே விஜய் இயக்கி உள்ளார்.

விளக்கிலிருந்து பூதம்

விளக்கிலிருந்து பூதம்

1979ம் ஆண்டு ரஜினி மற்றும் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் அலாவுதீனும் அற்புத விளக்கும். இப்படத்தில் கமலுக்கு ஒரு விளக்கு கிடைக்கும் அந்த விளக்கை ஒவ்வொரு முறையும் தேய்க்க, அந்த விளக்கிலிருந்து பூதம் வெளியாகி கேட்டதை தரும்.

ஆலம்பனா வசனம்

ஆலம்பனா வசனம்

தமிழ், மலையாளத்தில் வெளியான இத்திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதில் விளக்கிலிருந்து வரும் பூதமாக அசோகன் வெளிவந்து ஆலம்பனா சொல்லுங்கள் பிரபு என்று கூறுவார். இந்த திரைப்படத்திலிருந்து ஆலம்பனா என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர்

தற்போது ஆலம்பனா என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் பாரி கே விஜய் இயக்குகிறார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் வைபவ் , முனீஷ், பார்வதிநாயர், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

முதல் பாடல் நாளை ரிலீஸ்

முதல் பாடல் நாளை ரிலீஸ்

இத்திரைப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்திலிருந்து முதல் பாடலான எப்போ பார்த்தாலும் என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. படக்குழு இந்த அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X