Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“தமிழன்டா எந்நாளும்”: விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து தெறிக்கவிட்ட ஆளப்போறான் தமிழனுக்கு வயது 5
சென்னை: விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மெர்சல்.'
அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
அதகளமான
போஸ்டருடன்
அதிரடியான
அப்டேட்
கொடுத்த
சலார்
டீம்:
ராக்கி
பாய்க்கு
டஃப்
கொடுப்பாரா
பிரபாஸ்?

புதிய கூட்டணியில் மெர்சல்
பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் சிஷ்யனாக திரையுலகில் அடியெடுத்துவ் வைத்தவர் அட்லீ. முதலில் 'ராஜா ராணி' படத்தை இயக்கிய அட்லீ, அடுத்து விஜய் நடிப்பில் 'தெறி' படத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களை பெற்ற 'தெறி' கமர்சியலாக ஹிட் ஆனதோடு, வசூலுக்கும் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து அட்லீ, விஜய், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் 'மெர்சல்' திரைப்படம் உருவானது.

பாடல்களில் மிரட்டிய ஏ.ஆர். ரஹ்மான்
'உதயா', 'அழகிய தமிழ் மகன்' படங்களுக்குப் பிறகு விஜய், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் இந்தப் படம் உருவானதால், அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு குறைவைக்காமல், ஏ.ஆர். ரஹ்மானும் வெரைட்டியாக பாடல்களை கம்போஸ் செய்து, செம்ம ஹிட் கொடுத்தார். குறிப்பாக 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல், இளைஞர்களின் தேசிய கீதமானது.

வைரலான ஆளப்போறான் தமிழன்
விவேக் வரிகளில் ரஹ்மான் இசையமைத்த "ஆளப்போறான் தமிழன்' பாடல், ரசிகர்களை கொண்டாட வைத்தது. ரஹ்மானின் இசை நாடி நரம்புகளை முறுக்கேற்ற, விவேக்கின் வீரம் விளைந்த வரிகள் கேட்பவர்களை புல்லரிக்க வைத்தது. ரசிகர்கள் முதல் பலரின் செல்போன் ரிங்டோனிலும் 'ஆளப்போறான் தமிழன்' பாடலே ஒலித்தது. யூடியூப்பிலும் 16 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து புதிய உச்சம் தொட்டது.
Recommended Video

ஆளப்போறான் தமிழனுக்கு 5 வயது
மெர்சல் படத்தைத் தொடர்ந்து, அட்லீ - விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி 'பிகில்' படத்திலும் இணைந்து மாஸ் காட்டினர். விஜய் தற்போது 'வரிசு' படத்தில் பிஸியாக இருக்க, அட்லீ இந்தியில் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும் 'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா', 'மாமன்னன்' ஆகிய படங்களில் பிசியாக உள்ளார். இந்நிலையில், 'ஆளப்போறான் தமிழன்' பாடல், வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சோனி நிறுவனம் டிவிட்டரில் அறிவிக்க, விஜய் ரசிகர்கள் 'தமிழன்டா எந்நாளும்' என கொண்டாடி வருகின்றனர்.