twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உடல் உறுப்பு செயல்படவில்லை..ஆளவந்தான் பட நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரைத்துறை!

    |

    மும்பை : பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 77.

    மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விக்ரம் கோகலே இந்தி, மராத்தி, தமிழ், உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆளவந்தான், ஹேராம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அமிதாப்பச்சனின் நெருங்கிய நண்பரான விக்ரம் கோகலே சல்மான் கான், அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

    காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் விக்ரம் பட பிரபலம்… ரெடியாகிறதா புதிய கூட்டணி? காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் விக்ரம் பட பிரபலம்… ரெடியாகிறதா புதிய கூட்டணி?

    நடிகர் விக்ரம் கோகலே

    நடிகர் விக்ரம் கோகலே

    நடிகர் விக்ரம் கோகலேவுக்கு நவம்பர் 5ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

    உடல்நலக்குறைவால் மரணம்

    உடல்நலக்குறைவால் மரணம்

    இதனால் கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை பலன் அளிக்காமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் இரங்கல்

    பிரதமர் இரங்கல்

    இதனால் கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசக்கருவி சிகிச்சை பலன் அளிக்காமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கமல் இரங்கல்

    கமல் இரங்கல்

    நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில் , மேடையில் தொடங்கி, திரையில் தன் நடிப்புக் கலையை நிலைநிறுத்தியவர் விக்ரம் கோகலே. ஆளவந்தான், ஹேராம் சந்தர்ப்பங்களில் அவரது திறனை ரசித்திருக்கிறேன். உடல்நலிவால் மருத்துவமனைக்குச் சென்ற இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அவரது படம் வெளியாகும் அளவு நடிப்பை நேசித்தவர். அவருக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

    தேசிய விருது பெற்ற நடிகர்

    தேசிய விருது பெற்ற நடிகர்

    தேசிய விருது பெற்ற பழம் பெரும் நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவு திரையுலகிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது. விக்ரம் கோகலேவின் ரசிகர்களும் நண்பர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மூத்த நடிகர் விக்ரம் கோகலே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்ததாக வதந்தி பரவிய நிலையில் அவருடைய மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

    English summary
    Veteran actor Vikram Gokhale, who was undergoing treatment at a hospital in Pune, passed away yesterday 4pm.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X