Aalavandhan: ரியாஸ் கானின் ரிஸ்க்கை மறைத்த கமல்ஹாசன்.. மனைவியிடம் புலம்பித் தீர்த்துட்டாரே!
சென்னை: ஒரு படத்தை இயக்குபவர் மற்றும் அதில் நடிப்பவர்கள் மட்டுமே அதிகம் தெரிகின்றனர். பாடல்கள் மற்றும் பிஜிஎம் காரணமாக இசையமைப்பாளர்களும் வெளியே தெரிகின்றனர். ஆனால், எடிட்டர், ஒளிப்பதிவாளர்கள் கூட குறிப்பிட்ட சிலரை தவிர பலரும் அவர்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுகிறார்களா என்றால் இல்லை என்கிற நிலைமை தான் இங்கே உள்ளது.
இதில், ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் கிளப்பும் ஹீரோக்களுக்கு உசுரை கொடுத்து டூப் போட்டு நடிக்கும் உயிர்களை சினிமா உலகம் அப்படியே இருட்டடிப்பு செய்து ஹீரோக்களின் சம்பளத்தை மட்டும் பல நூறு கோடிகளுக்கு உயர்த்தி வருகிறது.
கமல்ஹாசனின் ஆளவந்தான் படம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், அந்த படம் முழுக்கவே கமல்ஹாசனுக்கு டூப் போட்ட நடிகர் ரியாஸ் கான் தனது மனைவி உமா ரியாஸின் யூடியூப் சேனலில் தற்போது பல விஷயங்களை ஓபன் செய்துள்ளார்.

பலி ஆடு: ஹீரோவின் வேல்யூ சினிமாவில் அதிகம் என்பதால் அவருக்கு பதிலாக ஆபத்தான சண்டைக் காட்சிகள், மாடியிலிருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுவது, பல்டி அடிப்பது, பறந்து பறந்து சண்டை போடுவது எல்லாமே பாடி டபுள் எனப்படும் டூப் நடிகர்கள் தான். சினிமாவில் அவர்களை பலி ஆடுகள் போலவே பயன்படுத்தி வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், ஜாக்கி சான் உள்ளிட்ட சிலர் டூப் போடாமல் பல ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளை செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகின்றனர். நடிகர்கள் பண்ண முடியாத காட்சிகளை வேண்டாம் என இயக்குநர்களிடம் சொல்வதில்லை. அதற்கு பதிலாக டூப்களை பயன்படுத்தி வருவது தான் பிரச்சனையாக மாறுகிறது.
கெளரவக் குறைச்சல்: சில நடிகர்கள் டூப் போட்டு நடித்தாலும், டூப்பே வேண்டாம் என சொல்லிவிட்டு ஹீரோவே ரிஸ்க் எடுத்து நடித்தார் என பில்டப் செய்வதும், இந்த காட்சியை டூப் தான் நடித்தார் என்றால் ஹீரோவின் மாஸ் குறைந்து விடும் என்பதால் டூப் நடிகர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
டபுள் ஆக்டிங்: இது ஒரு பக்கம் இருக்க டபுள் ஆக்டிங் படங்களுக்கெல்லாம் டெக்னிக்கலாக டூப் நடிகர்களின் பங்கு ரொம்பவே அவசியமானது. ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருப்பார். அதில், கமல்ஹாசனுக்கு டூப் போட்டது நடிகர் ரியாஸ் கான் தான். டூப் நடிகர்களுக்கான குறைந்த பட்ச அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
கமல் மறைச்சிட்டாரு: ரியாஸ் கான் கஜினி, வின்னர், பொன்னியின் செல்வன் என பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவரது மனைவி உமா ரியாஸும் நடிகை தான். உமா ரியாஸின் யூடியூப் சேனலில் தற்போது பேட்டி கொடுத்த ரியாஸ் கான் இந்த படத்தில் கமல் சாருடன் படம் முழுக்க கூடவே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல டெக்னிக்கலான விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆனால், இந்த படத்தில் நான் தான் டூப் போட்டேன் என்பதை யாருமே சொல்லவில்லை. என தனது மனைவியிடம் புலம்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











