twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் விட மாட்டேன்.. மறுபடியும் "ஆளவந்தான்".. தாணுவுக்கு ஏன் இந்த விபரீத விளையாட்டு!

    |

    சென்னை : ஆளவந்தான் திரைப்படத்தில் சில மாற்றங்களை செய்து அதை வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஆளவந்தான்.

    இத்திரைப்படம் 2001ம் ஆண்டு வெளியான இப்படத்தை தாணு தயாரித்திருந்தார்.

    கமல் 2 வேடத்தில்

    கமல் 2 வேடத்தில்

    ஒரு குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகள் குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்பது தான் ஆளவந்தான் படத்தின் மையக்கரு. இப்படத்தில் ஒரு கமேண்டோவாகவும், மற்றொருவர் சைக்கோவாகவும் அசத்தி நடித்திருப்பார் கமல்.

    இந்தியிலும்

    இந்தியிலும்

    இப்படத்தை தாணு தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கதை,திரைக்கதை,வசனம் என மூன்றரையும் கமல் கவனித்து இருந்தார். இப்படம் 20 கோடி ருபாய் செலவில் தமிழ், இந்தியில் வெளியானது. இதில் ரவீணா டாண்டன் சிறப்பு தோற்றத்தில் மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்தனர்.

    தேசிய விருது

    தேசிய விருது

    2001ம் ஆண்டு வெளியான இந்த படத்தை அந்த நேரத்தில் மக்கள் ரசிக்கவில்லை என்பதே உண்மை. இப்படம் இப்போது ரீலிஸ் ஆகி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும். இப்படம் சிறந்த கிராஃபிக்ஸூக்கான தேசிய விருதை பெற்றது. இந்த விருது ஆளவந்தான் படத்திற்கு கூடுதல் பெருமையை தேடித்தந்தது.

    கதையில் சில மாற்றங்களுடன்

    கதையில் சில மாற்றங்களுடன்

    ஆளவந்தான் சொன்ன கதை வேறு, எடுத்த கதை வேறு, ஒரு குழப்பமான கதையாக அமைந்துவிட்டது. ஆகையால் ஆளவந்தான் கதையை மீண்டும் எடிட் செய்து கதையில் சில மாற்றங்களை செய்து மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த படத்தை நிச்சயம் வெற்றி பெறச் செய்வேன் என்று தயாரிப்பாளர் தணு கூறியுள்ளார்.

    English summary
    Aalavandhan Re-release by Kalaipuli Thanu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X