எனக்கு எந்த ஆணுடனும் தொடர்பு இல்லை.. எல்லாம் அபாண்டமான பொய்.. பிரபல நடிகரின் மனைவி அதிர்ச்சி தகவல்!

சென்னை: தனக்கு எந்த ஆணுடனும் தொடர்பு இல்லை என்றும் தனது கணவரான நவாசுதீன் சித்திக் குடும்பத்தினர் குறித்த உண்மைகளை சொல்லப் போவதாகவும் அவரது மனைவி ஆலியா சித்திக் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Petta வில்லன் Nawazuddin க்கு மனைவி விவாகரத்து Notice | Petta, Sacred Games

பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிக்ரகள் மத்தியிலும் பரிட்சயமானார்.

இந்நிலையில் இவரது குடும்ப பிரச்சனைதான் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பெரும் பரபரப்பை கூட்டியுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நவாசுதீனின் மனைவி கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விவாகரத்து நோடீஸ்

விவாகரத்து நோடீஸ்

நவாசுதீன் சித்திக்கும் ஆலியாவும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார் ஆலியா. விவாகரத்து நோட்டீஸை நவாசுதீனின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்புக்கும் ஆலியாவின் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார்.

வேறொரு ஆணுடன் தொடர்பு

வேறொரு ஆணுடன் தொடர்பு

ஆனால் விவாகரத்து நோட்டீஸ் தொடர்பாக நவாசுதீனின் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனிடையே ஆலியாவுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் தனது கணவரை பிரிவதாக தகவல் வெளியானது. ஆண் நண்பர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது.

உண்மைகளை சொல்லப் போகிறேன்

உண்மைகளை சொல்லப் போகிறேன்

இந்நிலையில் டிவிட்டரில் இணைந்துள்ள ஆலியா, தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். மேலும் நாவசுதீன் குடும்பம் குறித்த தகவல்களை அறிய என்னை பின் தொடருங்கள், அவர்களை பற்றிய உண்மைகளை சொல்ல போகிறேன் என டிவிட்டி அதிரடி கிளப்பியிருக்கிறார்.

உண்மை ஊமையாகிவிடக்கூடாது

உண்மை ஊமையாகிவிடக்கூடாது

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் ஆலியா சித்திக். உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் டிவிட்டரில் இணைந்துள்ளேன். பண பலம் மிக்கவர்களால் உண்மை ஊமையாகிவிடக்கூடாது. உண்மையை வாங்கவும் முடியாது மோசடியும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு தொடர்பு இல்லை

எனக்கு தொடர்பு இல்லை

மற்றொரு டிவிட்டில் எந்தவொரு ஆணுடனும் எனக்கு எந்த உறவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். அத்தகைய கூற்றுக்களை வழங்கும் ஊடகங்களின் அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை. கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற அபத்தமான பொய்களை சில ஊடகங்கள் எனது புகைப்படத்துடன் கையாண்டதாகத் தெரிகிறது என கூறியிருக்கிறார்.

நான் கவலைப்படவில்லை

நான் கவலைப்படவில்லை

மேலும் நான் இப்போது என் குழந்தைகளுக்காக எழுந்து நிற்கவும் பேசவும் கற்றுக்கொள்கிறேன். இன்றுவரை நான் எந்த தவறும் செய்யவில்லை, எனவே நான் கவலைப்படவில்லை. இருப்பினும், வேறொருவரைக் காப்பாற்றுவதற்காக எனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் எவரையும் நான் விடமுடியாது. பணத்தால் உண்மையை வாங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

வாய்திறக்கவில்லை

வாய்திறக்கவில்லை

ஆலியாவின் இந்த டிவிட்டுகள் வைரலாகி வருகின்றன. இதனிடையே ஊரடங்கு காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் புதனாவில் உள்ள தன்னுடைய வீட்டில் சிக்கியிருக்கும் நவாசுதீன் சித்திக் தனது மனைவியின் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எதுவும் பேசாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X