படப்பிடிப்பின்போது திடீர் நெஞ்சுவலி.. பிரபல முன்னாள் ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதி!
ஐதராபாத்: படப்பிடிப்பின் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து பிரபல முன்னாள் ஹீரோயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல முன்னாள் ஹீரோயின் ஆமனி. இவர், மீனாட்சி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த இவர், புதிய காற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் முரளி ஹீரோவாக நடித்திருந்தார்.

தங்கமான தங்கச்சி
தொடர்ந்து, தங்கமான தங்கச்சி, இதுதான்டா சட்டம், முதல் சீதனம், ஹானஸ்ட் ராஜ், தெம்மாங்கு பாட்டுக்காரன், புதையல் உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தார். விஜயகாந்த், மம்மூட்டி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தெலுங்கு படங்கள்
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் காஜா முகைதீனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த ஆமனி, இப்போது தெலுங்கு படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.

தனியாக வருமாறு
சில வருடங்களுக்கு முன், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். பட வாய்ப்புக்காகச் சென்றபோது, ரிசார்ட் ஒன்றுக்கு தனியாகத் தன்னை வருமாறு அழைத்ததாகவும் அதை புரிந்துகொண்டு தவிர்த்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

மஞ்செரியல்
இந்நிலையில், இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்செரியல் (Mancherial) பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த வியாழக்கிழமை படப்பிடிப்பில்
கலந்துகொண்ட அவருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.
Recommended Video

லேசான நெஞ்சுவலி
இதையடுத்து படக்குழுவினர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது என்றும் பயப்படும்படி ஒன்றும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











