கமலா தாஸ் வேடத்தில் மஞ்சு வாரியர்... 'ஆமி' ட்ரெய்லர் நாளை ரிலீஸ்!

By Vignesh Selvaraj

சென்னை : டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்திருக்கும் 'ஆமி' திரைப்படம் மலையாளத் திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. மல்லுவுட் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

முன்னணி நாயகனாக வளர்ந்துவரும் டொவினோ தாமஸ், திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் ஆகியோர் பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்தப்போகும் தாக்கம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aami film poster and trailer

'ஆமி' படத்தில் மஞ்சு வாரியர் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். 'ஆமி' திரைப்படம் புகழ்பெற்ற கவிஞரும்,எழுத்தாளருமான கமலா தாஸ் என்கிற மாதவிக்குட்டியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆமி' படத்தில் கமலா தாஸ் வேடத்திற்கு முதலில் வித்யா பாலன் நடிக்கவிருந்து, பின்னர் மஞ்சு வாரியர் அந்த கேரக்டருக்கு ஒப்பந்தமானார். இந்தப் படத்தை டைரக்டர் கமல் இயக்கி வருகிறார். பிப்ரவரி மாதம் இப்படம் ரிலீஸாக இருக்கிறது.

இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மஞ்சு வாரியரின் வயதான கெட்டப் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், 'ஆமி' படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை ரிலீஸ் ஆகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X