மகனை அரை மணிநேரம் மட்டுமே டிவி பார்க்க அனுமதிக்கும் கஜினி
மும்பை: தனது இளைய மகன் ஆசாத் ராவை ஒரு சாதாரண வீட்டு குழந்தை போன்று வளர்ப்பதாக பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஆமீர் கான், அவரின் இரண்டாவது மனைவி கிரண் ராவின் மகன் ஆசாத் ராவ். சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆமீர் தனது மகன் ஆசாத் பற்றி பேசியுள்ளார்.
ஆசாத் பற்றி ஆமீர் கூறியதாவது,

ஆசாத்
நான் தினமும் 2 மணிநேரம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஆசாத்துடன் விளையாடுவேன். அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவேன், குளிக்க வைப்பேன். அந்த இரண்டு மணிநேரம் என் மகனுக்கு மட்டுமே.

கார்டூன்
ஆசாத் தினமும் அரை மணிநேரம் மட்டுமே டிவி பார்க்க அனுமதி. அதுவும் கார்டூன் சேனல் மட்டுமே பார்க்க அனுமதி அளித்துள்ளோம். கூடுதல் நேரம் பார்க்க வேண்டும் என்று கேட்டால் நானும், கிரணும் முடியாது என்று கூறிவிடுவோம்.

ஜுனைத்
என் மூத்த மகன் ஜுனைதுக்கு 23 வயது ஆகிறது. ஜுனைதும், மகள் இராவும் அருமையான குழந்தைகள். ஆசாதும் அவர்களை போன்றே சாதாரணமாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.

அழுகை
ஆசாத் இதுவரை ஒரு படத்தை கூட முழுதாக பார்த்தது இல்லை. பி.கே. படத்தில் என்னை அடிப்பதை பார்த்துவிட்டு பயந்து அழத் தொடங்கிவிட்டான் என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











