கிசு கிசு வாழ்க்கை முடிந்தது.. திருமண தேதியை அறிவித்த அமீர் VS பாவனி.. எப்போது திருமணம் தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர், பாவனி ரெட்டி இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலர் தினமான இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு விரைவில் என அறிவித்து இருந்தனர். இதையடுத்து, இவர்களின் நலன் விரும்பிகள் அனைவரும் என்ன விஷயம் என கேட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் திருமண தேதியை அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும் அழகான க்யூட்டான நடிகை பாவனி ரெட்டி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே, சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவானார்கள். அந்த நிகழ்ச்சியில், ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டேன்.ஆனால், திடீரென ஒரு நாள் அவர் தூக்கிட்டு திருமணம் செய்து கொண்டார். இதுநாள் வரைக்கும் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்குத் தெரியாது. பிறந்ததில் இருந்தே நான் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

3 வருட கிசு கிசு : இதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு வைல்டு கார்டு போட்டியாளராக வந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறினார். ஆனால், நான் உன்னை விட பெரியவள் என காதலை ஏற்காமல் இருந்தார். இதையடுத்து, பிபி ஜோடி நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இருவரும் கலந்து போது, அந்த நிகழ்ச்சியில் பாவனி, அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார். தற்போது, இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் லிவ்விங் ரிலேஷன்ஷிப் சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை பற்றி எல்லாம் இவர்கள் இருவரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
திருமணத் தேதி: இதையடுத்து, காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு coming soon என பதிவிட்டு இருந்தார்.. அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், திருமண தேதியா இல்லை புது படமா என கேட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் திருமண தேதியை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில், பாவனி இந்த மூன்று வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை, நமக்கு பிடித்தவர்களுடன் இருந்தால் மூன்று வருடம் கூட 3 நிமிடம் போல தான் இருக்கும். என கவிதை நடையில் பேசி திருமண தேதியை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 20-ம் தேதி அமீர் - பாவ்னி திருமணம் நடைபெறஇருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு இவர்களுடைய நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











