நீண்ட முத்தம்… ரெகார்ட் பிரேக் செய்த அமீர்கான்
சூப்பர் ஸ்டார் அமீர்கான் தன்னுடைய அடுத்தே படமான பிகே படத்தில் கதாநாயகிக்கு நீண்ட நேரம் முத்தம் கொடுத்து சாதனை படைத்துள்ளராம்.
3 இடியட்ஸ் படத்துக்கு பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் பிகே. இதில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.
இந்தப்படத்தில் இருவரும் கொடுக்கும் லிப் டு லிப் முத்தக் காட்சியை ராஜ்குமார் ஹிரானி படமாக்கியுள்ளார். இது புது சாதனையை படைத்துள்ளதாம்.

7 நிமிட முத்தம்
இதுவரை இந்திய சினிமாவில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சியில் இதுதான் நீளமான முத்தக்காட்சியாம். அதாவது 7 நிமிடங்கள் முத்தம் கொடுத்தாராம். இந்த காட்சி படமானதும் படக்குழுவினர் கைதட்டி அமீருக்கும் அனுஷ்காவுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்களாம்.

3இடியட்ஸ் படத்தில்
3 இடியட்ஸ் படத்தில் கரீனா கபூருக்கு முத்தம் கொடுத்து ஆமிர்கான் நடித்திருந்தார். பிகே படத்தில் அனுஷ்கா சர்மாவுக்கு நீண்ட முத்தம் கொடுத்து அசத்தியுள்ளாராம்.

ராஜா ஹிந்துஸ்தானி
ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் கரீஷ்மா கபூருக்கு 40 செகண்டுகள் முத்தம் கொடுத்தார் அமீர்

ரங் தே பாசந்தி
2006 ஆம் ஆண்டு ரிலீசான ரங் தே பாசந்தி படத்தில் வெளிநாட்டு நடிகை ஆலிஸ் பேட்டனுக்கு லிப் லாக் செய்திருப்பார் அமீர்.

சோனாலி பிந்த்ரே
சோனாலி பிந்த்ரே, ராணி முகர்ஜி என பிரபல நாயகிகளும் இவரது முத்தத்திற்கு தப்பவில்லை.

கயாமத் சே கயாமத் தக்
அமீர்கான் - ஜூஹி சாவ்லா ஜோடி பாலிவுட் சினிமாவில் ஹிட் ஜோடி என்று பெயரெடுத்த ஜோடி கயாமத் சே கயாமத் தக், இஷ்க், போன்ற படங்களில் ஜூஹியுடன் லிப் லாக் செய்திருப்பார் அமீர்.

சாதனை முத்தம்
தொடர் முத்த நாயகன் என்று பாலிவுட் உலகில் பெயரெடுத்தவர் இம்ரான் ஹஸ்மி. அவருக்கு முன்னதாகவே முத்தக்காட்சியில் அதிக அளவில் நடித்துள்ளார் அமீர்கான். இப்போது இந்தி திரையுலகில் நீண்ட நேரம் முத்தம் கொடுத்தவர் என்ற பெயரை பெற்றுள்ளார் அமீர்கான். பிகே படத்தில் அமீர் கொடுத்த முத்தம் ஷாருக், கத்ரீனா கைப் முத்த சாதனையும் மிஞ்சியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











