ஏன் திடீர்னு விவாகரத்து செய்தோம்.. அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

மும்பை: நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இருவரும் இணைந்து விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென நேற்று தனது மனைவி கிரண் ராவ் உடன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்.

அமீர்கானின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அமீர்கான் வீடியோ

அமீர்கான் வீடியோ

அமீர்கானின் விவாகரத்து விவகாரம் தான் நாடு முழுவதும் பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில், நடிகர் அமீர்கான் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் இருவரும் ஒன்றாக அமர்ந்து கைகளை கோர்த்தபடி வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

அதிர்ச்சியாத்தான் இருக்கும்

அதிர்ச்சியாத்தான் இருக்கும்

அந்த வீடியோவில் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த நடிகர் அமீர்கான் ரொம்பவே ஹேப்பியாக இந்தியில் பேசுகிறார். எங்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இந்த முடிவால் ரொம்பவே சந்தோஷமாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஒரே குடும்பமாக

ஒரே குடும்பமாக

கணவன் - மனைவி என்கிற உறவை மட்டுமே நாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளோம். மகன் ஆசாத்துக்காக இருவரும் ஒரே குடும்பமாக எப்போதுமே நட்பு பாராட்டி வாழ்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை ஒரு முடிவாக பார்க்காதீர்கள். இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம் எனக் குறிப்பிட்டுள்ளார் அமீர்கான்.

15 பொன்னான ஆண்டுகள்

நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்த கடந்த 15 ஆண்டுகளும் எங்களுக்கு பொன்னான ஆண்டாகவே இருந்தது. வாழ்க்கையை நிறைய சந்தோஷ தருணங்களுடன் வாழ்ந்து முடித்து விட்டோம். இனி இருவரும் சுதந்திர பறவையாக பறக்க ஆசைப்படுகிறோம். ரசிகர்கள் எங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என இருவரும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

அமீர்கானை தடை செய்க

அமீர்கானை தடை செய்க

பாலிவுட்டில் இருந்து நடிகர் அமீர்கானை தடை செய்ய வேண்டும் என அமீர்கானுக்கு எதிராக #Boycott_AamirKhan என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. மேலும், அமீர்கான் லவ் ஜிகாத் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டுகளையும், இந்து பெண்களை திருமணம் செய்து முஸ்லிம் குழந்தைகளை பெற்று பின்னர் மீண்டும் அதே வேலையை செய்து வருகிறார் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X