For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விக்ரம் வேதா இந்தி ரீமேக்: வேதாவாக அமீர்கான் விக்ரமாக சயீப் அலிகான் சும்மா பட்டைய கிளப்புமா

|

மும்பை: விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் உருவான விக்ரம் வேதா படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேதாளம் கேள்வி கேட்க விக்ரமாதித்தன் பதில் சொல்ல அவனிடமிருந்து மீண்டும் வேதாளம் தப்பிச்செல்லும். இந்த பாணியில் ஒரு படம் ஆக்சன் திரில்லராக எடுத்தால் எப்படியிருக்கும் என்று புஷ்கர் - காயத்ரி யோசித்ததன் விளைவாக உதயமான படம்தான் விக்ரம் வேதா.

Aamir Khan and Saif Ali Khan joins hindi remake of Vikram Vedha

2017ஆம் ஆண்டில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா அந்த வருடத்தில் ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா. இப்படம் நியோ நாயர் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் வெளியானது.

புஷ்கர் - காயத்ரி ஜோடி இயக்கியிருந்த இப்படத்தை சசிகாந்த் தயாரிப்பில் 11 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டது. இப்படம், தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

குறும்படங்களில் கற்றுக்கொண்ட பாடம் சினிமாவிற்கு உதவுகிறது - விஷால் சந்திரசேகர்

'விக்ரம் வேதா' விஜய் சேதுபதி வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது . இப்படத்தில் கேங்ஸ்டராக கலக்கியிருப்பார் விஜய் சேதுபத. நல்ல நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் மாதவனும் இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்தார். இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் நல்ல தீனியாக அமைந்தது இந்தப்படம்.

விக்ரம் வேதா படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. விக்ரமாக சயீப் அலிகானும், வேதாவாக அமீர் கானும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமீர்கான் தமிழ்த் திரைப்படமான கஜினியை ரீமேக் செய்து நடித்தார். இப்போது மீண்டும் வெற்றிபெற்றதமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். முதலில் வேதாவாக ஷாருக்கான்தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அமீர்கான், சயீப் அலிகான் இருவரும் இப்போது பட சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விக்ரம் வேதா பட சூட்டிங்கை தொடங்கி டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அமீர்கான் படங்களுக்கு உலகமெங்கும் வரவேற்பு உள்ளது. அவர் கேங்ஸ்ட்ராக நடிக்கிறார். இதில் சயீப் அலிகான் போலீஸ் அதிகாரியாக நடிப்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இதனை இந்தியிலும் இயக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாலிவுட் வட்டார பட்சிகள் கூறுகின்றன.

English summary
Sources said Aamir Khan and Saif Ali Khan to reunite after 18 years for Hindi remake of hit 2017 Tamil film 'Vikram Vedha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more