அமீர் கான் மகளுக்கு தடபுடலா நடந்த நிச்சயதார்த்தம்..யார் யார் கலந்துக்கிட்டாங்கனு தெரியுமா?

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகளுக்கு நேற்று தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

58 வயதாகும் நடிகர் அமீர் கான், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், டிவி பிரபலம், பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வருகிறார்.

1973களில் துவங்கி தற்போது வரை ஏராளமான படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்

நடிகர் அமீர் கான்

நடிகர் அமீர் கான்

நடிகர் அமீர் கான் Yaadon Ki Baaraat, Raakh,Dil, Rangeela, Raja Hindustani, ishq என பிளாக் பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து திறமையான நடிகர் என பெயர் எடுத்தார். Raja Hindustani திரைப்படத்தில் கரீஷ்மா கபூருடன் ஜோடி போட்டு நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற 'பர்தேசி பர்தேசி' என்ற பாடல் பாலிவுட் மட்டுமில்லாமல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இரண்டு மனைவிகள்

இரண்டு மனைவிகள்

பல திறமைகளைக் கொண்ட நடிகர் அமீர்கான் 1986ம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். இதையடுத்து, 2005ம் ஆண்டு லகான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ்வை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் அமீர் கானின் மகள் இரா கானுக்கு மும்பையில் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா, நுபுர் ஷிக்கரே என்பவரை காதலித்து வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன், இந்த திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

சிவப்பு ரோஜா போல

சிவப்பு ரோஜா போல

இந்த திருமண விழாவில் இரா கான் ஒரு அழகான சிவப்பு கவுன் அணிந்து கொண்டு ரோஜா போல காணப்பட்டார். நிச்சயதார்த்த விழாவில் இராவின் தந்தை அமீர்கான், தாய் ரீனா தத்தா, கிரண் ராவ், அமீர்கானின் மருமகன் இம்ரான் கான் மற்றும் பாட்டி ஜீனத் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X