twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துருக்கி அதிபரின் மனைவியை எப்படி சந்திக்கலாம்..? பாலிவுட் ஹீரோ அமீர் கானுக்குத் திடீர் எதிர்ப்பு!

    By
    |

    மும்பை: துருக்கி அதிபரின் மனைவி எமைன் எர்னவாவை சந்தித்த ஆமிர்கானுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    Recommended Video

    நடிகர் நட்டி நட்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | அப்பா வயது ஹீரோவுடன் கள்ளக்காதலா?- வீடியோ

    ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படம், பாரஸ்ட் கம்ப். டாம் ஹாங்ஸ், ராபின் ரைட், கேரி சினிஸ், சல்லி ஃபீல்ட் உட்பட பலர் நடித்திருந்தனர்.

    ராபர்ட் ஸெமக்கிஸ் இயக்கிய இந்தப் படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 6 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது.

    'அப்ப நான் நடிக்கிற படத்தை யார் முடிப்பாங்க? பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்பது பற்றி பிரபல நடிகை! 'அப்ப நான் நடிக்கிற படத்தை யார் முடிப்பாங்க? பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்பது பற்றி பிரபல நடிகை!

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    1994 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இந்தி நடிகர் ஆமிர்கான், லால் சிங் சத்தா என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இதில் கரீனா கபூர், விஜய் சேதுபதி, மோனா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அத்வைத் சந்தன் இயக்குகிறார். லாக்டவுனுக்கு முன் டெல்லி, ராஜஸ்தான், சண்டிகர், கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது.

    துருக்கி அதிபர் மனைவி

    துருக்கி அதிபர் மனைவி

    கொரோனா காரணமாக, இதன் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லாததால், படக்குழு இப்போது துருக்கி சென்றுள்ளது. அங்கு இதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. ரசிகர்களுடன் ஆமிர் கான் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மரியாதை நிமித்தமாக, துருக்கி அதிபரின் மனைவி எமினி எர்டோகனை இஸ்தான்புல்லில் நடிகர் ஆமிர்கான் சந்திந்தார்.

    எதிர்பார்க்கிறேன்

    எதிர்பார்க்கிறேன்

    இதுபற்றி எமினி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். அதில், புகழ்பெற்ற இந்தி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஆமிர்கானை இஸ்தான்புல் இல்லத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடிக்கும் லால் சிங் சத்தா பட ஷூட்டிங்கை துருக்கியின் பல்வேறு பகுதிகளில் நடத்த இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்று கூறியிருந்தார்.

    என்ன அர்த்தம்?

    என்ன அர்த்தம்?

    இதையடுத்து நடிகர் ஆமிர் கானுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'துருக்கி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு. பாகிஸ்தானுக்கும் நட்பு நாடாக இருக்கிறது. இந்நிலையில் அந்த நாட்டின் அதிபர் மனைவியை ஆமிர்கான் சந்தித்தால் என்ன அர்த்தம்? நடிகர் ஆமிர்கானின் சித்தாந்தம் என்ன?' என்று ஒருவர் கேட்டுள்ளார்.

    English summary
    Bollywood superstar Aamir Khan’s meeting with First Lady of Turkey Emine Erdoğan has upset many netizens at home.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X