3வது திருமணத்திற்கு தயாரான அமீர் கான்… விவாகரத்து ஆன கையோடு திருமண ஏற்பாடு தீவிரம்!
மும்பை: தங்கல் திரைப்படத்தில் தனது மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை, அமீர்கான் 3வதாக திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பல இடங்களில் சுற்றித்திரிந்ததாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் தெரிந்தே அவரது மனைவி கிரண் ராவ் விவாகரத்து செய்துள்ளதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக தகவல்கள் பரவி வருகின்றன.

அறிமுகம்
நடிகர்,இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் அமீர்கான். இவர் 1978 Yaadon Ki Baaraat என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை அடுத்து, பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பட்டி தொட்டி எங்கும்
Raakh,Dil, Rangeela, Raja Hindustani, ishq என பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படங்களில் நடித்து திறமையான நடிகர் என பெயர் எடுத்தார். Raja Hindustani திரைப்படத்தில் கரீஷ்மா கபூருடன் ஜோடி போட்டு நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற 'பர்தேசி பர்தேசி' என்ற பாடல் ஹிட்டடித்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

7 தேசிய விருது
2001ம் ஆண்டு விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியானத் திரைப்படம் லகான். இத்திரைப்படத்தில், ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அமீர்கான். இத்திரைப்படம் 7 தேசிய விருதுகளையும், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

ரீனா தத்தா
பல திறமைகளைக் கொண்ட முன்னணி நடிகரான அமீர்கானுக்கு இரண்டு மனைவிகள். 1986ம் ஆண்டு முதல் மனைவி ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இரண்டாவது திருமணம்
இதையடுத்து, 2005ம் ஆண்டு லகான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ்வை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகனும் இருக்கிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

பாத்திமா சனா சேக்
நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகி வசூலை வாரி குவித்த திரைப்படம் தங்கல். மல்யுத்த போட்டிகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம் பல விருதுகளைப் பெற்றது. இப்படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை அமீர்கான் 3வதாக திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

திருமணம்
தங்கல் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பல இடங்களில் சுற்றித்திரிந்ததாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபிடிக்காமல் தான் அவரது மனைவி கிரண் ராவ் விவாகரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











