முஸ்லிம் மதத்தை தழுவினாரா அமீர் கானின் மூன்றாவது மனைவி? அவங்க தமிழ்நாட்டு வாரிசுனு தெரியுமா?

மும்பை: பாலிவுட் மட்டும் இல்லாமல் மொத்த இந்திய சினிமா உலகமுமே விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று அமீர் கானின் மூன்றாவது திருமணம் குறித்து தான். அதுவும் தனது 61ஆவது வயதில் 47 வயதான கௌரி ஸ்ப்ராட்டைத் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இப்படி இருக்கையில், அமீர் கானின் மூன்றாவது மனைவியான கௌரி ஸ்ப்ராட் திருமணத்திற்காக, இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டார் என்று பேச்சுக்கள் இணையத்தில் அடிபடுகிறது. மேலும் சில சமூக விரோத எண்ணம் கொண்டவர்கள் இவர்களின் திருமணத்தை லவ் ஜிகாத் என்று இந்துத்துவவாதிகளால் பரப்பப்படும் உள்நோக்கம் கொண்ட பொய் தகவலாகவும் பரப்பட்டு வருகிறது.

Aamir Khan-Gauri Spratt Wedding Did Gauri Convert To Islam To Marry Aamir Details Here

அதாவது அமீர் கான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர், அதேபோல் கௌரி ஸ்ப்ராட் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். இது மட்டும் இல்லாமல் அவரது தயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது தந்தை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். அதனால் தான் அவரது பெயர் கௌரி என்று இடம் பெற்றுள்ளது. இதனால் பலரும் இவரை இந்து என்று நினைத்துக் கொண்டு, அதில் அவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்ள இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தி பல்பு வாங்கினர்.

மூன்றாவது திருமணம்: இப்படி இருக்கையில் இவர்களின் திருமணம் குறித்து அவதூறு கருத்துக்களை இணையவாசிகள் பலரும் பகிர்ந்து வந்தனர். அதிலும் குறிப்பாக அமீர் கானை காட்டமாக விமர்சித்தனர். முதல் இரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் உள்ளது. அதில் முதல் மனைவிக்கு பிறந்த ஜுனைத் கான் பாலிவுட்டில் நடிகராக உள்ளார். மகள் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இப்படி இருக்கையில் இந்த வயதில் திருமணம் தேவையா? என்று அபத்தக் கேள்விகளைக் கேட்டு வந்தனர். இரண்டாவது மனைவிக்கும் இவருக்கும் வாடகைத் தாய் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

மத மாற்றம் உண்மையா?: இந்நிலையில் அமீர் கான் - கௌரி ஸ்ப்ராட் திருமணம், திருமண சிறப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இருவரும் வேறு வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களின் திருமணம் முறைப்படி பதிவுத் திருமணமாகவும் நடத்தப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் திருமணத்திற்காக மதம் மாறிவிட்டார் ஸ்ப்ராட் என்று சிலர் சமூக வலைதளங்களில் விஷமக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஸ்ப்ராட்டிற்கு அவரது முதல் திருமணத்தில் குவின் என்ற மகன் உள்ளார். வாரிசுகளின் முன்னிலையில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X