பாலிவுட் கிங் அமீர்கான் அதிரடி முடிவு... இந்தியில் ரீமேக்காகும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

திருவனந்தபுரம்: மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் கடந்தாண்டு அக்டோபரில் வெளியானது.
தர்சனா ராஜேந்திரன், பாசில் ஜோசப், அஜு வர்க்கீஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
5 கோடி பட்ஜெட்டில் உருவான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே 50 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியிருந்தது.
திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை பாலிவுட் நடிகர் அமீர் கான் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 அசத்திய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

அசத்திய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே

மலையாளத்தில் அடுத்தடுத்து தரமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீஸான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களுடன் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக 5 முதல் 6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.

 அமீர் கான் தயாரிப்பில் இந்தியில் ரிமேக்

அமீர் கான் தயாரிப்பில் இந்தியில் ரிமேக்

திரையரங்குகளைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஓடிடியிலும் தூள் பறத்தியது. தர்சனா ராஜேந்திரனும் பாசில் ஜோசப்பும் நடிப்பில் அட்டகாசம் செய்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளாராம் பாலிவுட் கிங் அமீர் கான். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை அமீர் கான் கைப்பற்றியுள்ளது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 இந்தி ரீமேக் இயக்குநர்

இந்தி ரீமேக் இயக்குநர்

அமீர் கான் புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்தியில் உருவாகும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் பாத்திமா சனா ஷேக் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளாராம். அதேபோல் மலையாளத்தில் இயக்கிய விபின் தாஸ் தான் இந்தி ரீமேக்கையும் டைரக்ட் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. பாத்திமா சனா ஷேக் உடன் இயக்குநர் விபின் தாஸ் எடுத்துக்கொண்ட போட்டோ இந்த தகவலை உறுதிசெய்துள்ளது. லால் சிங் சந்தா படத்தின் மிகப் பெரிய தோல்வியால் சில வருடங்கள் நடிக்கவில்லை என அறிவித்திருந்தார் அமீர் கான். ஆனால், தொடர்ந்து படங்கள் தயாரிப்பதை நிறுத்தப்போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

 விரைவில் ஷூட்டிங்

விரைவில் ஷூட்டிங்

அதன்படி, தற்போது மலையாளத்தில் ஹிட் அடித்த ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தை தயாரிக்கவுள்ளார் அமீர் கான். மலையாளத்தைப் போலவே இந்தியிலும் இந்தப் படம் ஹிட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லால் சிங் சந்தா படத்தில் அதிகம் நஷ்டமடைந்த அமீர் கானுக்கு ஜெய ஜெய ஜெய ஜெய ஹே இந்தி ரீமேக் கை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

 கதை இதுதான்

கதை இதுதான்

மனைவியை எப்போதுமே அடக்கி வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் கணவனாக பாசில் ஜோசப். அவரது மனைவி பாத்திரத்தில் தர்சனா ராஜேந்திரன் நடித்திருந்தார். கணவனின் அட்ராசிட்டிக்கு அதிரடியாக முடிவு கட்டுவதோடு, ஆண்களை விட பெண்களால் தனியாக வாழ்ந்துவிட முடியும் என தர்சனா நிரூபித்துக் காட்டுவதே இந்தப் படத்தின் கதை. காமெடியாக உருவாகியிருந்த இந்தப் படம் இப்போது இந்திக்கும் செல்வது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X