அந்த ஹீரோவா இது? லீக் ஆன போட்டோ, ஷாக்கான ரசிகர்கள்
மும்பை: ஆமிர்கான், விஜய் சேதுபதி நடிக்கும் லால் சிங் சத்தா படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஆமிர்கானின் தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
டாம் ஹாங்க்ஸ், ரோபின் ரைட், கேரி சினிஸ், மிக்கேலி வில்லியம்சன் ஆகியோர் நடித்து 1994-ல் வெளியான ஹாலிவுட் படம், ஃபாரஸ்ட் கம்ப்'. ராபர்ட் ஸெமிக்கிஸ் இயக்கி இருந்த இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்தது.

இதை இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர் இப்போது. லால் சிங் சத்தா என்ற பெயரிடப்பட்டுள்ள இதில், டாம் ஹாங்ஸ் நடித்த கேர்கடரில் ஆமிர் கான் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடி மற்றும் தாடி வளர்த்திருக்கிறார் ஆமிர்கான்.
இதில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஒரிஜினல் வெர்ஷனின் பப்பா என்ற கேரக்டரில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்தது. சிங் வேடத்தில் அமீர் கான் அப்படியே முழுமையாக மாறி இருந்தார்.

இதன் படப்பிடிப்பு ஜெய்சல்மாரில் நடந்து வருகிறது. அப்போது ரசிகர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் இருப்பது நடிகர் ஆமீர்கான் போலவே தெரியவில்லை. முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.
இதையடுத்து பாரஸ்ட் கம்ப்-பில் நடித்த டாம் ஹாங்ஸ் ஸ்டில்லையும், ஆமிர் கான் ஸ்டில்லையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் இந்தியாவில் அதிக வசூலை அள்ளும் என்றும் ரசிகர்கள் ஆருடம் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











