எளிமையாக நடந்த அமீர் கான் - கௌரி ஸ்பார்ட் திருமணம்.. 61 வயதில் 47 வயது காதலியை கரம் பிடித்து அசத்தல்

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர் கான் தனது நீண்ட நாள் காதலியான கௌரி ஸ்பார்ட்டை மிகவும் எளிமையாக இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் தனது வீட்டிலேயே பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமண சிறப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதால், பலரும் இணைய வழியே அமீர் கான் - கௌரி ஸ்பார்ட் தம்பதியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாக உள்ளது.

Aamir Khan Marries Longtime Partner Gauri Spratt in Intimate Registered Wedding Ceremony

அமீர் கானுக்கு தற்போது வயது 61, அதேபோல் அவரது மனைவி கௌரி ஸ்பார்ட்டின் வயது 47. இது அமீர் கானுக்கு மூன்றாவது திருமணம் என்றாலும், தனது மூன்றாவது திருமணம் தொடர்பான அறிவிப்பை தனது மகனை வைத்துக் கொண்டே கூறினார். அதேபோல், தற்போது அவரது திருமணத்தை தனது மகனின் முன்னிலையிலேயே நடத்தி உள்ளார். இவரின் திருமண புகைப்படத்தைப் பார்த்த சிலரோ 61 வயதாகிவிட்டது, தற்போது திருமணம் அவசியமா என்று மிகவும் தவறான கேள்விகளை முன் வைத்தனர். இப்படி கேள்வி எழுப்பியவர்களுக்கு சில இணையவாசிகளே நெத்தியடி பதிலையும் கொடுத்து வருகிறார்கள். இளமையோ முதுமையோ வயது என்பதைக் காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது என்பதே மிகவும் மோசமான சிந்தனைதான்.

மேலும், தனது வாழ்க்கையை தனிமையாக ஒருவர் வாழ நினைப்பதும், வாழ்க்கைத்துணையுடன் வாழ முடிவெடுப்பதையும் எந்த கோணத்தில் மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வியை பதில் கேள்வியாக கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X