90 வயது அம்மா.. துடித்துப்போன அமீர்கான்.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக தனது அம்மா ஜீனத் ஹுசைனின் சிகிச்சைக்காக சென்னையில் தான் தனியாக வீடு எடுத்து தங்கி வருகிறார் அமீர்கான். வெள்ள பாதிப்பின் போது அவரும் சென்னையில் சிக்கியபோது தான் அவர் சென்னையில் வசித்து வருவதே பலருக்கும் தெரிய வந்தது. அஜித் குமாரின் உதவியால் அவரும் விஷ்ணு விஷாலும் தப்பித்ததாக கூறப்பட்டது. மேலும், அஜித்துடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.
அமீர்கானின் அம்மா ஜீனத் ஹுசைனுக்கு 90 வயதாகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தனது மகள் திருமணத்துக்காக அம்மாவின் சிகிச்சை முடிந்து மும்பைக்கு சென்றிருந்தார் அமீர்கான்.

இந்நிலையில், அவரது தாயாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்: அமிதாப் பச்சனுக்குப் பிறகு பாலிவுட்டையே கலக்கிய 3 கான் நடிகர்களில் அமீர்கானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை வேறு எந்தவொரு நடிகரின் படமும் செய்யாத 2000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் சாதனை இன்னமும் அமீர்கான் வசம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கல் படத்தின் மூலம் 2016ம் ஆண்டு அவர் நடத்திய சாதனையை 2024ம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் மூலம் கூட முறியடிக்கவில்லை. அதிகபட்சமாக அந்த படம் 1871 கோடி தான் வசூல் செய்தது என நேற்று அறிவித்தனர்.

அம்மா மருத்துவமனையில் அனுமதி: கடந்த 2023ம் ஆண்டு திடீரென அமீர்கானின் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மும்பையை விட சென்னை அப்போலோ மருத்துவமனையில் அதற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக கேள்விப்பட்ட அமீர்கான் தனது தாயாருடன் சென்னை வந்தார். உடல்நலம் குணமடைந்த நிலையில், மீண்டும் மும்பை சென்ற அமீர்கான் அம்மாவை இங்கேயே வைத்து கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் அமீர்கானின் அம்மா ஜீனத் ஹுசைனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமீர்கானின் அம்மா குணமடைந்து மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தமிழில் அறிமுகம்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த அமீர்கான் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் அவர் ஆதிவாசியாக நடித்த விளம்பரம் ஒன்றும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











