வனிதா கற்றுக்கொடுத்த பாடம்.. முக்கிய முடிவு எடுத்த அமீர்கான்!

சென்னை: இந்தியாவின் டிஜிட்டல் திரைப்பட விநியோக முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஆமீர் கான், தனது நடிப்பில் அண்மையில் தியேட்டரில் வெளியான 'சிதாரே ஜமீன் பர்' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் நேரடியாக YouTube Movies-on-Demand தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அமீர் கானி 'சீதாரே ஜமீன் பர்' படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் படமான சாம்பியன்ஸின் ரீமேக்காகும். இந்த திரைப்படத்தில் அமீர் கான் பாஸ்கெட் பால் பயிற்சியாளராக வருகிறார். அவருக்கு இருக்கும் குடிபழக்கத்தால் அடிக்கடி பிரச்சனையில் மாட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அப்படி ஒரு பிரச்சனையில் அமீர் கான் மாட்டிக்கொள்ள, அவரை அறிவுசார் குறைபாடுள்ளவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சியாளராக இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால், அந்த இடத்திற்கு செல்லும் அமீர் கான், அங்குள்ள மக்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சி அளிப்பதே படத்தின் கதை.

Amir Khan Sitaare Zameen Par review
Photo Credit:

அமீர் கான்: இப்படம் உலக அளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலை அள்ளியது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர் உட்பட 38 நாடுகளில் இப்படம் வெளியாகி வசூலை அள்ளியது. இதுகுறித்து பேசிய அமீர் கான். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, '3 இடியட்ஸ்', 'தங்கல்' படங்கள் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இதனால், Pay-Per-View முறையை பின்பற்றி YouTube-ல் ஆமீர் கான் Talkies என்ற சேனலை ஆரம்பித்துள்ளேன். அதில், நிறைய வீடியோக்கள் உள்ளன.

சிதாரே ஜமீன் பர்: அதில், கடந்த ஏப்ரல் மாதம் முதல், சிதாரே ஜமீன் பர் படம் தொடர்பான வீடியோக்கள் மட்டும் 350 மில்லியன் பார்வைகளை கடந்தது. இதனால், இப்படம் தியேட்டரில் வெளியானதைத் தொடர்ந்து, YouTube தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை திவ்ய நிதி சர்மா எழுதியுள்ளார். இதில், அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக், அரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பென்ட்சே, பிரிஜேந்திர கலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆமிர் மற்றும் அபர்ணா புரோஹித் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு ஷங்கர்-எஹ்சான்-லாய் இசையமைத்துள்ளார். மேலும், அறிவுசார் குறைபாடு உள்ள 10 நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் பார்க்க வேண்டுமென்றால், ஒரு நபருக்கு ரூ.25 மட்டுமே செலவாகும். இது பார்வையாளர்களுக்கும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளை உருவாக்க முடியும் என்றார்.

மிஸஸ் அண்ட் மிஸ்டர்: அண்மையில் நடிகை வனிதா விஜயகுமார் நான் இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு இருந்தார். ஒரு மில்லியன் பாலோவர்களை வைத்து இருந்த அவர் அதில் 89 ரூபாய் கட்டி படத்தை பார்த்துக்கொள்ளலாம். அதை பாணியை தற்போது அமீர் கானும் கையில் எடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக யூடியூபில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X