ரஜினிக்கு மாற்று.. ஷங்கர் போட்ட பிளான்.. கடைசியில் நின்னு விளையாடிய சூப்பர் ஸ்டார்.. நடிகர் பளீச்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக, படக்குழு மேக்கிங் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அதிக வசூலைக் குவித்த படமாக இருப்பது ரோபோட் 2.0. இந்த படத்தில் ரஜினிக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், இயக்குநர் ஷங்கர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த, 2010ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் மாபெரும் வெற்றிப் படமாகவும் மாறியது. ஏ.ஆர். ரகுமான் இசை படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. மேலும் பிரமாண்ட இயக்குநர் என இந்த படத்தின் மூலமும் ஷங்கர் ஒரு முறை நிரூபித்திருந்தார்.

படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. பல படங்களுக்கு இரண்டாம் பாகம் வெளியானதால் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. அப்படி இருக்கும்போது, இந்த படத்தில்ன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பதில் பாலிவுட் நடிகர் அமீர் கானை நடிக்க வைக்க ஷங்கர் கேட்டுள்ளார். இது தொடர்பாக அமீர் கான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமீர் கான்: அதாவது இது தொடர்பாக அவர் பேசும்போது, " ரோபோட் 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க ஷங்கர் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், என்னை நடிக்கச் சொன்னார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து, எனக்கு உடல்நிலை சரியில்லை. இந்த படத்தில் நான் நடிக்க உடல் ஒத்துழைக்குமா எனத் தெரியவில்லை. எனவே எனக்கு பதில் நீங்க நடிக்க வேண்டும் எனக் கூறினார்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து சொன்னதால் நான் கொஞ்சம் எமோஷனலாக மாறிவிட்டேன். இந்த போன் காலுக்கு பின்னர் நான் எப்போது கண்ணை மூடி யோசித்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திப் பார்க்க முடியவில்லை. அதன் பின்னர் ஷங்கருக்கு போன் செய்து, என்னால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. அந்த கதாபாத்திரத்திற்கு ரஜினி சார் மட்டும் தான் சரியாக இருப்பார். வேறு யாராவதை கூட நடிக்கச் சொல்லுங்கள், ஆனால் என்னால் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











