ரூ.544 கோடி வசூல் செய்து பி.கே. புதிய சாதனை: அசந்து போன பாலிவுட்
மும்பை: ஆமீர் கானின் பி.கே. படம் உலக அளவில் ரூ. 544 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்த பி.கே. படம் உலக அளவில் சக்கை போடு போடுகிறது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ஆமீரின் நடிப்பை பற்றி தான் பேசுகிறார்கள் இல்லை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
படமும் பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

முதல்நாள்
பி.கே. படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 26.6 கோடி வசூல் செய்தது. மேலும் இரண்டே நாட்களில் ரூ.56 கோடி வசூல் செய்தது.

ரூ.92.5 கோடி
வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடித்த பி.கே. ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.92.5 கோடி வசூல் செய்தது.

சாதனை
ஆமீர் கான் நடித்த தூம் 3 படம் உலக அளவில் ரூ.542 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது. இந்நிலையில் ரிலீஸான இரண்டே வாரத்தில் உலக அளவில் ரூ.544 கோடி வசூல் செய்து தூம் 3 படத்தின் சாதனையை பி.கே. முறியடித்துள்ளது.

ரூ.600 கோடி
பி.கே. நிச்சயம் ரூ. 600 கோடி வசூல் செய்யும் என்று பாலிவுட்காரர்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











