என்னடா நடக்குது இங்க.. விவாகரத்து அறிவிச்சுட்டு இப்படி விளையாடுறாரே அமீர்கான்.. ஓஹோ புது தொடக்கமோ?

மும்பை: நடிகர் அமீர் கான் தனது இரண்டாவது மனைவியான கிரண் ராவ் உடன் ஜாலியாக டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இருவரும் இணைந்து தங்களின் விவாகரத்து அறிவிப்பை சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினர்.

விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து இருவரும் இணைந்து லால் சிங் சத்தா படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

உதவி இயக்குநர்

உதவி இயக்குநர்

நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகி ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வரை சென்ற லகான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கிரண் ராவ். அவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக முதல் மனைவியான ரீனா தத்தாவை விவாகரத்து செய்து விட்டு கிரண் ராவை திருமணம் செய்து கொண்டார் அமீர்கான்.

விவாகரத்து அறிவிப்பு

விவாகரத்து அறிவிப்பு

முதல் மனைவியை 15 ஆண்டு கால திருமணத்திற்கு பிறகு விவாகரத்து செய்த அமீர் கான், இரண்டாவது மனைவியான கிரண் ராவையும் 15 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இருவரும் ஒரு மனதாக இந்த விவாகரத்து அறிவிப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்துக்கு பின்

விவாகரத்துக்கு பின்

அமீர் கான் திடீரென விவாகரத்து அறிவித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், விவாகரத்துக்கு பின் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், சந்தோஷமாகவே இந்த முடிவை தாங்கள் எடுத்ததாகவும், விவாகரத்துக்கு பின்னும் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறினர்.

படத்தில் பங்கேற்பு

படத்தில் பங்கேற்பு

அமீர் கான் மற்றும் கிரண் ராவ் தயாரிப்பில் தான் லால் சிங் சத்தா படம் உருவாகி வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நீங்கிய நிலையில், மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. லால் சிங் சத்தா படப்பிடிப்பில் தயாரிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் கிரண் ராவ்.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ்

இந்நிலையில், நடிகர் அமீர் கான் மற்றும் கிரண் இருவரும் லால் சிங் சத்தா படப்பிடிப்பு தளத்தில் டேபிள் டென்னிஸ் விளையாடிய புகைப்படங்களை அமீர்கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார். இருவரையும் இப்படி பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மகனுக்காக

மகனுக்காக

அமீர் கானுக்கும் - கிரண் ராவுக்கும் பிறந்த மகன் ஆசாத்தை இருவரும் இணைந்து வளர்ப்போம் என விவாகரத்து அறிவிப்பின் போது உறுதி அளித்தனர். இந்நிலையில், மகன் ஆசாத்துக்காகத் தான் இந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டு என்றும், மகன் ஆசாத்தும் விளையாடும் புகைப்படங்களையும் அமீர் கான் ஷேர் செய்து ரசிகர்களுக்கு உணர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X