பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்
மும்பை: தங்கல் படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய நடிகர் ஆமீர் கான் மறுத்துள்ளார்.
உரி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததை அடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை நீங்கி தற்போது இந்திய படங்கள் திரையிடப்படுகின்றது.
இந்நிலையில் சூப்பர் ஹிட்டான தங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிட மறுத்துள்ளார் ஆமீர் கான்.

சென்சார் போர்டு
ஆமீர் கான் நடித்துள்ள தங்கல் படத்தை பார்த்த பாகிஸ்தான் சென்சார் போர்டு இரண்டு காட்சிகளை நீக்கச் சொல்லியது. அதாவது இந்திய தேசிய கொடி வரும் காட்சி மற்றும் தேசிய கீதம் பாடும் காட்சியை நீக்குமாறு கூறியுள்ளது.

ஆமீர் கான்
படத்தின் கிளைமாக்ஸில் வரும் இரண்டு காட்சிகளை பாகிஸ்தான் சென்சார் போர்டு நீக்கச் சொல்லியதை கேட்டு ஆமீர் கான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்துள்ளார். அந்த 2 காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட அவர் மறுத்துள்ளார்.

ஒன்னும் இல்லையே
படத்தில் தேசபக்தியை தீவிரமாக காட்டாத நிலையில் நம் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் இசைக்கும் காட்சிகளை எப்படி நீக்கச் சொல்லலாம் என்கிறார் ஆமீர்.

விருது
தங்கல் படத்தில் சிறு வயது கீதா போகத்தாக நடித்த காஷ்மீரை சேர்ந்த சிறுமி ஜாய்ரா வாசிமுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











