twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுக்காகவே ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தை ரீமேக் செய்த அமீர்கான்: ‘லால் சிங் சத்தா மூவிலயும் அந்த சீனா?

    |

    சென்னை: ஹாலிவுட்டில் 1994ம் ஆண்டு வெளியான ஃபாரஸ்ட் கம்ப்' திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கியிருந்தார்.

    1986ம் ஆண்டு வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 6 தேசிய விருதுகளை வென்று அசத்தியது.

    தற்போது 'ஃபாரஸ்ட் கம்ப்' திரைப்படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

    அப்போ அந்த 'எஸ்’.. இப்போ இந்த 'எஸ்’.. விவாகரத்து நடிகருடன் திடீர் நெருக்கம்.. இதுதான் காரணமா? அப்போ அந்த 'எஸ்’.. இப்போ இந்த 'எஸ்’.. விவாகரத்து நடிகருடன் திடீர் நெருக்கம்.. இதுதான் காரணமா?

    சினிமா மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டதாக மக்களால் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள நிலவியலும் சூழலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு காணப்பட்டாலும், மனிதர்களும் அவர்களின் குணாதிசயங்களும் இங்கே ஏதோவொரு புள்ளியில் ஒன்றிணைந்துவிடும். இதுவே மொழிகளை கடந்தும் பல திரைப்படங்கள், உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படுகின்றன. இதற்குச் சரியான உதாரணமாக ஹாலிவுட்டில் வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தைக் கூறலாம்.

    ஃபாரஸ்ட் கம்ப் அறிமுகம்

    ஃபாரஸ்ட் கம்ப் அறிமுகம்

    பறவையின் வெண்சிறகொன்று காற்றில் மெல்ல மிதந்து வந்து ஃபாரஸ்ட் கம்பின் காலடியில் விழுகிறது. அதை அவன் எடுத்து தன்னுடைய பெட்டியில் வைத்துக்கொண்டு, அங்கே பேருந்துக்காக காத்திருப்பவர்களிடம் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறான். முதுகுத் தண்டுவடத்தில் இருக்கும் பிரச்சினையால் நடக்கும் திறனை இழக்கும் சிறுவனான ஃபாரஸ்ட் கம்புக்கு அவனது தாய் மட்டுமே ஒரே ஆதரவு. கால் பிரேஸ்கள் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான விசேஷ காலணியின் உதவியைக் கொண்டு அவனால் நடக்க முடியும்.

    அம்மாவின் போராட்டம்

    அம்மாவின் போராட்டம்

    கம்ப் எந்த வகையிலும் மற்றவர்களுக்குக் குறைந்தவன் இல்லை என்பதை அவனது தாய் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறாள். கம்பை பள்ளியில் சேர்க்கச் செல்லும் அவனது அம்மாவிடம், தலைமை ஆசிரியர், கம்பின் IQ அளவு குறைவாக இருப்பதால் அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார். அவரிடம் தன்னை இழந்து கம்பை பள்ளியில் சேர்க்கிறார் அவனது தாய்.

    ஜென்னியின் குரல்

    ஜென்னியின் குரல்

    முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் கம்ப்க்கு. பள்ளிப் பேருந்தில் சக மாணவர்கள் இடம்தரத் தயங்குகின்றனர். அப்போதுதான் ஜென்னி அவனை அரவணைக்கிறாள். அப்படியே இருவரும் இணை பிரியா நண்பர்களாகின்றனர். ஒருநாள் கம்ப்பை விரும்பாத சிறுவர்கள் சிலர், அவனைத் தாக்குகின்றனர். அங்கிருந்து தத்தித் தடுமாறித் தப்பிக்கும் கம்ப்பை வேகமாக ஓடச் சொல்லி ஊக்கமளிக்கிறாள் ஜென்னி. அவனது கால்களில் இருந்த leg braces சுக்குநூறாக உடைகிறது. மின்னல் வேகத்தில் ஓடி அந்தச் சிறுவர்களிடமிருந்து தப்பிக்கிறான் ஃபாரஸ்ட் கம்ப்.

    மீண்டும் ஓட்டம்

    மீண்டும் ஓட்டம்

    கம்ப் பெரியவனான பின்னரும், சைக்கிளில் துரத்திக் கொண்டிருந்த சிறுவர்கள் இப்போது இளைஞர்களாகி காரில் அவனைத் துரத்துகின்றனர். மீண்டும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கம்ப் ஒரு மைதானத்துக்குள் புகுந்து ஓடுகிறான். அவனது வேகமான ஓட்டம் கம்ப்க்கு அலபாமா பல்கலைக்கழகத்தில் ஸ்கார்லர்ஷிப்பை பெற்றுத் தருகிறது.

    ராணுவத்தில் கம்ப்

    ராணுவத்தில் கம்ப்

    கல்லூரியை முடித்துவிட்டு ராணுவத்தில் சேரும் கம்ப், அங்கே புப்பா என்ற சக ராணுவ வீரருடன் நண்பனாகிறான். இருவரும் வியட்நாமுக்கு எதிரான போருக்கு அனுப்பப்படுகின்றனர். அந்த போரில் புப்பா இறந்து போகிறான், பின்னர் போருக்கு எதிராக நடக்கும் ஒரு பேரணியில் கலந்துகொள்ளும் கம்ப், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜென்னியைச் சந்திக்கிறான். தற்போது ஹிப்பியாக மாறிவிட்ட ஜென்னி, அன்று இரவு முழுவதும் அவனோடு நகரைச் சுற்றுகிறாள். விடிந்ததும் மீண்டும் கம்ப்பின் வாழ்விலிருந்து மறைகிறாள்.

    ஜென்னியுடன் காதல்

    ஜென்னியுடன் காதல்

    ஒருநாள் திடீரென ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படும் கம்ப், மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்கிறான். சிறிது நாட்களில் கம்ப்பின் அம்மா இறந்து போகிறார். இன்னொரு பக்கம் ஜென்னியிடம் தன் காதலைச் சொல்லி தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான் கம்ப். மறுக்கும் அவள் அன்றைய இரவை அவனோடு கழிக்கிறாள். மீண்டும் காலையில் மாயமாகும் ஜென்னியிடம் இருந்து சில வருடங்களுக்குப் பிறகு கம்ப்க்கு கடிதம் வருகிறது.

    காதலின் துயரம்

    காதலின் துயரம்

    ஜென்னியைத் தேடிச் செல்லும் கம்ப்க்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜென்னி, தனது மகனை கம்ப்க்கு அறிமுகம் செய்து வைத்து, அவன் உனது மகன் தான் எனக் கூறுகிறாள். அவர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு வரும் கம்ப், ஜென்னியைத் திருமணம் செய்து கொள்கிறான். ஒரு வருடம் கழித்து நோயின் வீரியத்தால் ஜென்னியும் இறந்துபோகிறாள். அதன்பிறகு மகனை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறான் கம்ப். தனது மகனை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பும் கம்ப்பின் காலடியில் கிடக்கும் வெண்சிறகொன்று மீண்டும் காற்றில் மிதந்து சென்று மறைகிறது.

    6 ஆஸ்கர் விருதுகள்

    6 ஆஸ்கர் விருதுகள்

    1994ல் வெளியான இத்திரைப்படம், 1986ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ராபர்ட் ஜெமிக்ஸ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதற்கு முன்பே 'Back to the future' உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலம் அடைந்திருந்தாலும், 'Forrest Gump' இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்து. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளையும், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்று சாதனைப் படைத்தது 'ஃபாரஸ்ட் கம்ப்.'.

    அசாத்தியமான படைப்பு

    அசாத்தியமான படைப்பு

    கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட மகத்தான பாத்திரங்களுடன் அசாத்தியமான படைப்பாக வெளியான ஃபாரஸ்ட் கம்ப், வாழ்தல் என்பது எளிய கடமை என்ற உண்மையை ஆழமாக பேசியது. எளிமையான காட்சிகளால் மனித மனங்களின் பல நுட்பமான அடுக்குகளை திரையில் விவரித்த ஃபாரஸ்ட் கம்ப், இயலாமையின் பிடியின் சிக்கியிருப்பவர்களை அன்பு மட்டுமே குணமாக்கும் என நெற்றிப் பொட்டில் அடித்து புரிய வைத்தது. உணர்ச்சிகளின் குவியலா விருந்து படைத்த இந்த 'ஃபார்ஸ்ட் கம்ப்,' தற்போது அமீர்கான், நாக சைதன்யா, கரீனா கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது.

    லால் சிங் சத்தா

    லால் சிங் சத்தா

    இந்தியில் 'லால் சிங் சத்தா' என்ற தலைப்பில் ரீமேக் ஆகியுள்ள 'லால் சிங் சத்தா' படத்தை, அத்வைத் சந்திரன் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. காதல் காட்சிகளில் கம்ப் - ஜென்னி செய்த மாயாஜாலத்தை, அமீர்கானும் கரீனா கபூரும் சிறப்பாக செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகச் சிறந்த வாழ்வியல் அனுபவத்தை தரவிருக்கும் 'லால் சிங் சத்தா' படத்தின் ஒரிஜினலான 'ஃபாரஸ்ட் கம்ப்' நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

    English summary
    Aamir Khan remake the film 'Forrest Gump' for this reason: Is that scene in 'Laal Singh Chaddha' movie?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X