Aamir Khan: அமீர் கானுக்கு வந்த சோதனை.. இந்த நிலைக்கு வந்துட்டாரே.. உண்மை தெரியாமல் ரசிகர்கள் கிண்டல்

மும்பை: நடிகர் அமீர் கான் இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகர். இவர் ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்வார். அந்த அளவிற்கு இவர் நடிப்பின் மீதும் சினிமா துறையின் மீதும் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர். ஆனால் இவர் மும்பையில் கேவ் மேனைப் போல வேடமிட்டு நடந்து வந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அமீர் கான், பாலிவுட் சினிமாவில் முதல் முறையா ரூபாய் 2000 கோடிகளை வசூல் செய்த நடிகர். தங்கல் படத்திற்காக இவரது நடிப்பு பெரும் அளவில் பாராட்டப் பட்டது. அதேபோல், பி.கே படத்திற்காக இவரது அட்டகாசமான நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தனது சினிமா வாழ்க்கையில் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு வருகின்றார்.

aamir khan bollywood aamir khan caveman video

தயாரிப்பாளராகவும் ஜொலிக்கும் இவர், கடந்த ஆண்டு தான் தயாரித்த லபதா லேடீஸ் படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றார். இந்தப் படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு சென்று, ஆஸ்கார் வெல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை. படம் விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்டது.

aamir khan bollywood aamir khan caveman video

கேவ்மேன்: அமீர் கான் தற்போது கேவ் மேன் வேடத்தில் மும்பை வீதிகளில் நடந்து வந்துள்ளார். வழக்கமாக அந்த வீதி வழியே செல்லும் மக்கள் இவரை வித்தியாசமாகப் பார்த்தது மட்டும் இல்லாமல், அவரை ஒரு பிச்சைக்காரர் என நினைத்துவிட்டனர். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடப்பது, கை ரிக்‌ஷா வண்டியை இழுத்துக் கொண்டு ஓடுவது. சாலையோர கடையில் சென்று அலப்பறை செய்வது என இவர் செய்த விஷயங்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

குழப்பம்: முதலில் இது பிச்சைக்காரர் இல்லை, வேறு யாரோ ஒருவர் என்ற சிந்தனைக்குள்ளே மக்கள் செல்லவில்லை. மேலும் அவர் செய்த குறும்புத் தனங்களை வேடிக்கை பார்த்த மக்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். அழுக்கான உடைகள், கலைந்த தலைமுடி, தாடி என பக்கா கேவ்மேனாக காட்சி அளித்தார். இதனை இணையத்தில் பார்த்த ரசிகர் ஒருவர், என்ன அமீர் கான் படங்கள் சரியாக போகவில்லையா? இந்த நிலைமைக்கு வந்துட்டீங்களே என கமெண்ட் அடித்துள்ளார். அமீர் கானின் இந்த செயல் படத்தின் புரோமோஷனா? படப்பிடிப்பா? எனத் தெரியாமல் பாலிவுட் கொஞ்சம் குழப்பத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X