அமீர்கானின் சத்தா சிங் படத்தில் இணைந்த சமந்தா கணவர்.. இதுக்குத்தான் விஜய்சேதுபதியை தூக்கிட்டாங்களா?

மும்பை: நடிகர் அமீர்கானின் சத்தா சிங் படத்தில் நடிகை சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா இணைந்துள்ளார்.

அமீர்கான் மற்றும் விவாகரத்தான அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் உடன் மிலிட்ரி கெட்டப்பில் நாகசைதன்யா இருக்கும் புகைப்படம் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய்சேதுபதி முதலில் நடிக்கவிருந்த வேடம் தான் இது என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்

ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்

பிரபல ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் இந்த லால் சிங் சத்தா. பழைய படங்களை ரீமேக் செய்யும் புதிய டிரெண்டை நடிகர் அமீர்கானும் விடவில்லை என்பது தான் பாலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக உள்ளது.

சமந்தா சிபாரிசு

சமந்தா சிபாரிசு

தி ஃபேமிலி மேன் 2 எனும் இந்தி வெப்சீரிஸில் நடிகை சமந்தா நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தாவை தொடர்ந்து இந்தியில் நடிகர் நாகசைதன்யா அறிமுகமாக உள்ளார். சமந்தா தான் சிபாரிசே என பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன.

அமீர்கானுடன் நாகசைதன்யா

அமீர்கானுடன் நாகசைதன்யா

சார் டாம் ஹேங்க்ஸ் சார் நீங்களா? என கேட்கும் அளவுக்கு அவரை போலவே அச்சு அசல் மாறியுள்ள நடிகர் அமீர்கானுடன் டோலிவுட் நடிகர் நாகசைதன்யா இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

விஜய்சேதுபதி வேண்டாம்

விஜய்சேதுபதி வேண்டாம்

அமீர்கான் உடன் நடிகர் விஜய்சேதுபதி தான் இந்த படத்தில் முதலில் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அமீர்கானே விஜய்சேதுபதியை காண காத்திருந்து பார்த்ததாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் அமீர்கான் எதிர்பார்த்த அளவுக்கு உடல் எடையை குறைக்க முடியாத நிலையில், விஜய்சேதுபதி அந்த படத்தில் இடம்பெறவில்லை.

புது தொடக்கம்

புது தொடக்கம்

சமீபத்தில் இரண்டாவது மனைவி கிரண் ராவ் உடன் நடிகர் அமீர்கான் விவாகரத்து அறிவித்த நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களும் கிரண் ரொம்ப சோகமா இருக்கிறார் எனக் கூறினர். ஆனால், தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் தயாரிப்பாளராக அமீர்கானுடன் இணையாக சிரித்தபடி கிரண் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மும்பைக்கு ஷிப்ட்

மும்பைக்கு ஷிப்ட்

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பிரகாசிக்க வேண்டும் என நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா இருவரும் முடிவு செய்துள்ளனர். அடிக்கடி ஹைதராபாத்துக்கு வந்து செல்வது சிரமமாக இருக்கும் என்பதால் இருவரும் மும்பையிலேயே புதிய வீடு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X