காதல் முறிவு? ஒத்த போட்டோவை போட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகர் அமிர்கானின் மகள்!

மும்பை: நடிகர் அமிர்கானின் மகள் இசையமைப்பாளருடனான காதலை முறித்துக்கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாலிவுட்டில் 1973ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அமிர்கான். இவரது முதல் மனைவி ரீனா தத்தா.

இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். 2002 ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

நெருக்கமான போட்டோக்கள்

நெருக்கமான போட்டோக்கள்

இந்நிலையில் இவரது மகள் ஐரா கான் இசையமைப்பாளர் மிஷால் கிரிபளானியை காதலித்து வருகிறார். அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

ரசிகர்கள் சோகம்

ரசிகர்கள் சோகம்

இந்நிலையில் ஐரா தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐரா தனது காதலரான மிஷாலுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.

எல்லாம் சரியாகிவிடும்

அதில் மிஷால் பின்னால் இருந்தபடி, ஐராவை இறுக்கி அணைத்துக் கொண்டிருக்கிறார். அந்த போட்டோவை வெளியிட்டதோடு எல்லாம் சரியாகிவிடும் என்று கேப்ஷன் கொடுத்துள்ள ஐரா, #missyou #life #existentialcrisis #acceptance #notsomidlifecrisis #love #relationship #sofarsogood #us #theworld #humanity #keepcalm #itsokay #smile ஆகிய ஹேஷ்டேக்குகளை டேக் செய்துள்ளார்.

உறுதியான தகவல்

உறுதியான தகவல்

ஐரா வெளியிட்டிருக்கும் போட்டோ நெருக்கமாக இருந்தாலும் அவர் போட்டிருக்கும் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. பலரும் மிஷால் - ஐரா காதல் பிரேக்கப்பாகியிருக்கலாம் என கருத்து கூறி வருகின்றனர். ஆனால் பிரேக்கப் குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

பார்க்க விரும்புகிறேன்

முன்னதாக, ஐராவின் பிறந்த நாளில், மிஷால் தனது பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி. நீங்கள் எளிமையானவர். இந்த பிறந்தநாள் பதிவில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். எனது பிறந்தநாளுக்காக நான் நெட்ஃபிலிக்ஸில் ஒன்றாக பார்க்க விரும்புகிறேன்.. சுமார் 140 மில்லியன் மணிநேரங்கள் இருந்தோம் " என பதிவிட்டிருந்தார்.

பிஸியா ஐரா?

பிஸியா ஐரா?

இதனிடையே அமிர்கான் முன்னதாக தனது மகள் ஐரா, படத் தயாரிப்பில் ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார். ஒரு வேளை அந்த வேலையின் காரணமாக ஐரா இப்படி ஒரு போஸ்டை போட்டிருப்பாரா என்றும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X