14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.. பிரபல ஹீரோவின் மகள் பகீர் தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

By

மும்பை: தனது 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல ஹீரோவின் மகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி நடிகர் ஆமீர்கான். இவருடைய முதல் மனைவி ரீனா தத்தா. இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும் இரா கான் என்ற மகளும் உள்ளனர்.

14 வயதில் பாலியல்

14 வயதில் பாலியல்

இவர்கள், அம்மா ரீனா தத்தாவுடன் வசித்து வருகின்றனர். பின்னர் நடிகர் ஆமிர்கான், உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 23 வயதான இரா கான், தனது 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், தான் நான்கு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்றதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து இப்போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இதுபற்றி கூறியிருப்பதாவது:

தெரிந்தே செய்கிறாரா?

தெரிந்தே செய்கிறாரா?

எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது பற்றி தெரியவில்லை. அவர் எனக்கு தெரிந்தவர்தான்.

ஒரு வருடமானது

ஒரு வருடமானது

இருந்தாலும் அது தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு ஒரு வருடம் ஆனது. அது புரிந்ததும், உடனடியாக என் பெற்றோருக்கு மெயில் அனுப்பினேன். பின்னர் நானே இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியேறிக் கொண்டேன்.

கையாள நினைத்தேன்

கையாள நினைத்தேன்

இதிலிருந்து வெளியேறிய பின் பயப்படவில்லை. இனி அது நடக்காது என உணர்ந்தேன். முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை. ஏனென்றால் நானே அதைக் கையாள நினைத்தேன். எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று முடிவு செய்தேன்

சுமூகமான முறை

சுமூகமான முறை

சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டபோது கூட நான் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. அவர்கள் சுமூகமான முறையிலேயே விவாகரத்து செய்துகொண்டனர். இப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்து விடவில்லை. நாங்கள் நன்றாகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X