‘தம்’ பிரியாணியோடு போட்டிக்கு வரும் தூம்!

By Mayura Akilan

சென்னை: கார்த்தி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள பிரியாணி திரைப்படம் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநாளில் ஜீவா திரிஷா நடித்துள்ள என்றென்றும் புன்னகை திரைப்படம் ரீலீசாகிறது.

இந்த படங்களுடன் பாலிவுட் உலகில் பெரும் எதிர்பார்ப்பினை எற்படுத்தியுள்ள தூம் 3 திரைப்படமும் சென்னையில் ரீலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீர்கான் நடிப்பில்

அமீர்கான் நடிப்பில்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்துள்ள தூம் 3 படத்தில் கத்ரீனா கைஃப், அபிஷேக் பச்சன், ஜாக்கிஷெராப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ்' நிறுவவம் சார்பில் ஆதித்ய சோப்ரா தயாரிக்கும் இப்படத்தை விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ் இந்தி என தமிழ் நாட்டில் மட்டும் 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

சோனி டிவியில்

சோனி டிவியில்

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை 75 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது சோனி டிவி நிறுவனம். சாட்டிலைட்

மாஸ் காட்டும் அமீர்கான்

மாஸ் காட்டும் அமீர்கான்

உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆகியிருக்கும் விஷயம்தான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்! இப்படம் இவ்வளவு பெரிய விலைபோக ஆமீர் கான் என்ற மாஸ் ஹீரோதான் காரணம் என்கின்றனர் அனுபவம் நிறைந்த பாலிவுட் பிரபலங்கள்.

சென்னை எக்ஸ்பிரஸ் சாதனை

சென்னை எக்ஸ்பிரஸ் சாதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் சாதனையை முறியடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தூம் 3 தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வெளியிடப்படுகிறதாம்.

பிரியாணிக்கு போட்டி

பிரியாணிக்கு போட்டி

டிசம்பர் 20ம் தேதியன்றுதான் கார்த்தி ஹன்சிகா நடித்த பிரியாணி, ஜீவா திரிஷா நடித்த என்றென்றும் படங்கள் வெளியாகின்றன. தூம் 3 சரியான போட்டியாக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X