ஏப்ரல் 14 வேண்டாம்.. ஒரேயடியாக ஓட்டம் எடுத்த அமீர்கான் படம்.. பிரபாஸ் படமும் தள்ளிப் போகுதாம்!

மும்பை: அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஹாலிவுட் திரைப்படமான தி ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் லால் சிங் சத்தா.

இந்த படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ராணுவ வீரராக நாக சைதன்யா நடித்துள்ளார்.

ஏப்ரல் 14ல் இல்லை

ஏப்ரல் 14ல் இல்லை

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அமீர்கானின் லால் சிங் சத்தா இந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதிக்கு வெளியாகு என தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது, வரும் ஏப்ரல் 14ம் தேதி படம் வெளியாகாது என்றும் ஆகஸ்ட் 11ம் தேதி லால் சிங் சத்தா வெளியாகும் என்றும் அமீர்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த பயமா?

அந்த பயமா?

ஏப்ரல் 14ம் தேதி பீஸ்ட், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியாகும் சூழலில் அமீர்கானின் லால் சிங் சத்தா வெளியாகவில்லை என்கிற அறிவிப்பு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய படங்கள் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வரும் நிலையில், அமீர்கானின் படம் வசூல் பாதிப்பு ஏற்படும் என தள்ளிப் போயுள்ளதா என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

ஏன் தாமதம்

ஏன் தாமதம்

ஆனால், லால் சிங் சத்தா படத்தின் ஷூட்டிங்கையே இன்னமும் படக்குழு முடிக்காதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் என அமீர்கான் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், ஏப்ரல் 14ம் தேதிக்குள் கூட படப்பிடிப்பை முழுமையாக நிறைவு செய்ய முடியாது சூழல் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், எப்படி இத்தனை ரிலீஸ் தேதிகளை அமீர்கான் அறிவித்தார் என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்பி வருகின்றனர்.

பிரபாஸுக்கு நன்றி

பிரபாஸுக்கு நன்றி

மேலும், தனது அறிவிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருந்த நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் லால் சிங் சத்தா படத்திற்காக வழிவிட்டு வேறு ஒரு தேதியில் வெளியாக உள்ளதையும் அமீர்கான் குறிப்பிட்டுள்ளார். ஆதிபுருஷ் படக்குழு மற்றும் நாயகன் பிரபாஸுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அந்த தேதியில் வெளியாகுமா?

அந்த தேதியில் வெளியாகுமா?

ஏற்கனவே ஒரு ஆண்டாக பல ரிலீஸ் தேதிகள் அறிவித்து தள்ளி வைக்கப்பட்டு வரும் அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதியிலாவது ரிலீசாகுமா? அல்லது அப்போதும் ஷூட்டிங் முடியவில்லை என தள்ளி போடுவீர்களா என பாலிவுட் ரசிகர்கள் அமீர்கானை கலாய்த்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் படங்களை தென்னிந்திய திரைப்படங்கள் பின்னுக்குத் தள்ளி உள்ளதே அந்த ரசிகர்களின் இந்த கோபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X