ஆமிர்கானுடன் நம்ம விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம்... கொரோனா வைரஸ் மிரட்டலால் இப்படி ஆகிடுச்சே!

By

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படம் பற்றிய அப்டேட்டை அதன் டைரட்டர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

ரீமேக் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக போனி கபூருடன் இணைய போகிறாரா அஜித்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படம், பாரஸ்ட் கம்ப். டாம் ஹாங்ஸ், ராபின் ரைட், கேரி சினிஸ், சல்லி ஃபீல்ட் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ராபர்ட் ஸெமக்கிஸ் இயக்கிய இந்தப் படம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 6 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது.

லால்சிங் சத்தா

லால்சிங் சத்தா

1994 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான இந்தப் படத்தை முறையாக அனுமதி பெற்று இந்தியில் ரீமேக் செய்கின்றனர். லால்சிங் சத்தா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். கரீனா கபூர் கான், விஜய் சேதுபதி, மோனா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அத்வைத் சந்தன் இயக்குகிறார். ஆமிர்கானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

View this post on Instagram

Sat Sri Akaal ji, myself Laal...Laal Singh Chaddha.🙏

A post shared by Aamir Khan (@_aamirkhan) on

ஷூட்டிங் ஸ்பாட்

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த வருடம் வெளியிட்டார் ஆமிர்கான். இதற்கு வரவேற்பு கிடைத்தது. கரீனா கபூரின் லுக்கும் வெளியிடப்பட்டு அதும் வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்புகள், கொல்கத்தா, கேரளா, கோவா, இமாச்சல் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தன. அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்ப்பட்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

இந்நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரிலீஸ் ஆக இருந்த படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மொத்த திட்டங்களும் சிதைந்துள்ளது.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ்

இந்நிலையில், இந்தப் படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதன் ரிலீஸ் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போகும் என்று இதன் டைரட்டர் அதுல் குல்கர்னி தெரிவித்துள்ளார். 'இதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அதனால், ரிலீஸ் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போகிறது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X