Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அமீர் கான் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்.. வெளியானது அட்டகாசமான அறிவிப்பு!
சென்னை: பாலிவுட் நடிகர் அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
காலையில், இறகு புகைப்படத்துடன் அப்டேட் வந்த உடனே லால் சிங் சத்தா என்றே கெஸ் செய்தோம். இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் ட்வீட் போட்டு அதை உறுதி செய்துள்ளார்.
இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர் கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பகத்தின் குழந்தையும் என்னுடையது தான்.. கமல் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ பதிவு.. சூர்யாவும் பாராட்டு!

பெரிய படங்களை வாங்கும் உதயநிதி
இந்த ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களை வெளியிட்டுள்ளது. மேலும், சந்தானத்தின் குலுகுலு, சியான் விக்ரமின் கோப்ரா, தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு, கார்த்தியின் தீபாவளி ரிலீசான சர்தார் படம் வரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமீர் கான் படம்
வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ள அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி, சிரஞ்சீவி படம் பார்த்தாச்சு
இந்திய அளவில் இந்த படத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அமீர்கான். சிரஞ்சீவி, ராஜமெளலி, ராம்சரண், புஷ்பா பட இயக்குநர் சுகுமார் மற்றும் நாக சைதன்யா உள்ளிட்ட பிரபலங்களுக்கு போட்டுக் காட்டி இருந்தார். தெலுங்கில் இந்த படத்தை சிரஞ்சீவி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். படத்தை பார்த்த பிரபலங்கள் அமீர் கானின் அசாத்திய நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
Recommended Video

ஹாலிவுட் ரீமேக்
பாலிவுட் முழுவதுமே ரீமேக் படங்களாக நிறைந்து வரும் நிலையில், அமீர் கானின் படமாவது புதிய கதையாக வரும் என்று பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் பிரபல ஹாலிவுட் படமான தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது தெரிந்த நிலையில், சற்றே அப்செட் ஆகி உள்ளனர். சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் பட வசூலை அமீர் கானின் இந்த படம் எப்படி முறியடிக்கப் போகிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.