ரஜினியின் லிங்காவுடன் மோதுகிறது ஆமீர்கானின் பிகே!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் வெளியாகும் அடுத்த வாரமே ஆமீர்கானின் பிகே படம் வெளியாகிறது.
இதனால் திரையரங்குகள் ஒதுக்குவதில் வட மாநிலங்கள் மற்றும் சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நேரடியாக நடித்து வெளியாகும் படம் லிங்கா.

பிறந்த நாளில்
இந்தப் படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிடுவதில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் உறுதியாக உள்ளனர்.

5000 ப்ளஸ் அரங்குகள்
தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடிப் படமாக வெளியாகும் லிங்கா, இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த மூன்று மொழிகளிலும் 5000 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஆமீரின் பிகே
இந்தப் படம் வெளியான அடுத்த ஒரு வாரத்தில், அதாவது டிசம்பர் 19-ம் தேதி ஆமீர் கானின் புதிய படமான பிகே வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நிர்வாண கோலத்தில் தோன்றி பரபரப்பு கிளப்பியுள்ளார் ஆமீர்கான். படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பும் உள்ளது.

ஒரு வாரம்தான்
இந்த இரு பெரிய படங்களுக்கும் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. இரண்டு படங்களின் வரவுக்காகவும் ஆவலுடன் திரையுலகம் காத்திருக்கிறது. ஆனால் இரு படங்களுக்குமான இடைவெளி ஒரு வாரம்தான் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











