அசால்டா ரூ.620 கோடி வசூல் செய்த பி.கே.: ஆமீர் 'பீட்ஸ்' ஆமீர்

By Siva

மும்பை: உலக அளவில் ரூ.620 கோடி வசூல் செய்து இதுவரை அதிகம் வசூல் செய்த பாலிவுட் படம் என்ற பெருமையை பி.கே. பெற்றுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்த பி.கே. படம் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி ரிலீஸானது. படம் வெளியானதில் இருந்தே தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைச்சல் இல்லாமல் உள்ளது.

அதனால் படம் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

ரூ.56 கோடி

ரூ.56 கோடி

பி.கே. படம் ரிலீஸான முதல் நாள் 26.6 கோடி வசூல் செய்தது. இரண்டே நாட்களில் ரூ.56 கோடி வசூல் செய்தது.

ரூ.324 கோடி

ரூ.324 கோடி

படம் ரிலீஸான 23 நாட்களில் ரூ.324.25 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் பி.கே. படம் உலக அளவில் ரூ.620 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியா

இந்தியா

பி.கே. இந்தியாவில் ரூ.467 கோடியும், வெளிநாடுகளில் ரூ.153 கோடியும் வசூலித்துள்ளது. உலக அளவில் அதிக வசூல் செய்த பாலிவுட் படம் என்ற பெருமையை பி.கே. பெற்றுள்ளது.

தூம் 3

தூம் 3

ஆமீர் கான் நடித்த தூம் 3 படம் உலக அளவில் ரூ.542 கோடி வசூல் செய்தது தான் இத்தனை நாட்கள் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பி.கே. முறியடித்துள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை தூம் 3 தக்க வைத்துள்ளது. தூம் 3 வெளிநாடுகளில் ரூ.170 கோடி வசூல் செய்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

பி.கே. படத்தில் இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி காட்சிகள் உள்ளது என்று கூறி பஜ்ரங் தளம், விஷ்வஇந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து படத்திற்கு தடை விதிக்க கோரின. மேலும் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் பி.கே. படம் ஓடிய தியேட்டர்கள் தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X