நிர்வாண போஸ்டர்: ஆமீர் கானை ட்விட்டரில் கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான் நடித்து வரும் படத்தின் போஸ்டரில் நிர்வாணமாக நிற்பது பற்றி தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிப்புக்கு பெயர் போனவர் ஆமீர் கான். அவர் நடித்து வரும் பி.கே. படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஆமீர் நிர்வாணமாக நின்று கொண்டு கையில் ஒரு டேப் ரிக்கார்டரை மட்டும் பிடித்து மானத்தை மறைத்துள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் நடக்கும் காமெடியை பாருங்கள்.

ஆமீர்
நிர்வாணமாக போஸ் கொடுத்து தனக்கும், சன்னி லியோனுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஆமீர் நிரூபிக்க விரும்புகிறார் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

போட்டி
நிர்வாணமாக நின்றதன் மூலமாக ஆமீர் கான் கவர்ச்சி நடிகைகள் சன்னி லியோன், பூனம் பாண்டே ஆகியோருடன் போட்டி போடுகிறார் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

பணம்
ஆமீர் கானுக்கும், சன்னி லியோனுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன? நிர்வாணமாக இருக்க இருவருக்கும் பணம் கிடைக்கிறது என்று ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்னி லியோன்
நேற்று இரவில் இருந்து ட்விட்டர் ஆமீர் கானை தான் கவனிக்கிறது. அந்த போஸ்டரை பார்த்த சன்னி அழுது அழுது தூங்கிவிட்டார் என்று ஒருவர் ட்வீட்

2 வகை மக்கள்
உலகில் இரண்டு வகை மக்கள் உள்ளனர். ஒரு வகையினருக்கு சன்னி லியோனின் பழைய படங்கள் பிடிக்கும். மற்றொரு வகையினருக்கு ஆமீர் கானின் போஸ்டர் பிடிக்கும் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











