ஒரு ஹீரோ மாமனாராகிறார்!..!
மும்பை: ஆமிர்கானின் 21 வயது மகன் ஜூனைத் தனது காதலியை தனது தந்தையிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
ஜூனைத்தும், அவரது தோழி சோனம் வர்மாவும் தீவிரமாக காதலித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சோனத்தை தனது தந்தையிடம் ஜூனைத் அறிமுகப்படுத்தி வைத்திருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி நட்பு
சோனமும், ஜூனைத்தும் கல்லூரியிலிருந்தே நன்றாக பழகி வருகிறார்களாம்.

முதல் மனைவியின் மகன்
ஆமிர் கானின் முதல் மனைவியான ரீனா தத்தாவின் மகன்தான் ஜூனைத். ரீனா தத்தாவும், ஆமிரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து பின்னர் மணந்து கொண்டவர்கள். .

எம்.பி.ஏ படிக்கும் சோனம்
சோனம் தற்போது எம்.பிஏ. படித்து வருகிறார். இவரும், ஜூனைத்தும் எச்ஆர் கல்லூரியில் படித்தபோதுதான் பிரண்ட் ஆனார்கள். பின்னர் அது காதலாக உருவெடுத்தது.

சினிமாவில் ஜூனைத்
ஜூனைத் தனது தந்தை வழியில் சினிமாவில் தீவிரமாக இருக்கிறார். தற்போது ராஜ்குமார் ஹிரானியிடம் உதவி இயக்குநராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இனி இல்லை ரகசியம்
கடந்த ஒரு வருடமாக தங்களது காதலை ஜூனைத்தும், சோனமும் ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது அதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளனராம். இனிமேலும் ரகசியம் காக்கப் போவதில்லையாம்.
ஒரு ஹீரோ மாமனாராகிறார்!


Click it and Unblock the Notifications











