நிர்வாண ஆமீர்கானுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் - காங் எம்எல்ஏ பரபரப்பு!
மும்பை: நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகர் ஆமீர் கானுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக காங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ணா ஹெக்டே அறிவித்துள்ளார்.
முன்னணி பாலிவுட் நடிகர் அமீர்கான் 'பி.கே.' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக அவர் நிர்வாண போஸ் கொடுத்த போஸ்டர்கள் மும்பை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புள்ளது.

வழக்குகள்
ஏராளமான பொது நல அமைப்புகள் வழக்குகளும் தொடர்ந்துள்ளன. அமீர்கானின் நிர்வாண போஸ்டர்களைக் கிழிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

போஸ்டர் அணிவிக்கும் போராட்டம்
இந்த நிலையில் அந்த போஸ்டர்களுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணா ஹெக்டே அறிவித்துள்ளார்.

குழந்தைகள் பார்க்கிறார்கள்
இதுகுறித்து மும்பையில் அவர் அளித்த பேட்டியில், "ஆமீர்கானின் நிர்வாண போஸ்டர்களும் கட்அவுட்களும் வெறுக்கத்தக்க வகையில் உள்ளன. இவற்றையெல்லாம் குழந்தைகள் பார்க்கிறார்கள். குடும்பத்தினரும் பார்க்கிறார்கள்.

நீக்குங்கள்
இந்த ஆபாச காட்சியை பி.கே.படத்தில் இருந்து நீக்க வேண்டும். போஸ்டர், கட்அவுட்டுகளையும் அகற்ற வேண்டும். மும்பையில் ஆமீர்கானின் நிர்வாணப் பட கட்அவுட்டுக்கு ஆடை அணிவிக்கும் போராட்டம் நடத்துவோம்," என்று அறிவித்துள்ளார்.

மறுப்பு
ஆனால் இந்த போஸ்டர்களை நீக்கும் உத்தேசம் ஏதுமில்லை என்றும், இது விளம்பர உத்தி அல்ல, கதையின் முக்கிய காட்சி என்றும் ஆமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











