Coolie: கூலி படத்தில் அமீர் கான் நடிக்க என்ன காரணம்.. லோகேஷ் கனகராஜ் சரியா காய் நகர்த்தியிருக்காரே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படமான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டு உள்ளது. படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதனால் படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் அமீர் கான் கூலி படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பது குறித்து கூறியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தெலுங்கு சினிமாவில் இருந்து நாகார்ஜுனா, இந்தி சினிமாவில் இருந்து அமீர் கான், மலையாள சினிமாவில் இருந்து சௌபின் சாஹிர், கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் என்பதால் படம் மட்டும் சரியாக கிளிக் ஆனால் வேற லெவல் வசூல் உறுதி.

அமீர்கான்: இப்படி இருக்கும்போது படத்தில் எக்ஸ்டெண்டெட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமீர் கான் தான் ஏன் படத்தில் கமிட் ஆனேன் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் பேசுகையில், " நான் எனது சினிமா வாழ்க்கையில் இதுவரை ஒரு படத்தில் கூட கதை கேட்காமல் கமிட் ஆனதில்லை. அப்படி நான் கமிட் ஆன படம் என்றால் அது கூலி படம் தான். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்காக மட்டும் தான்" என்று கூறினார். அவரது இந்த பேச்சுக்கு அரங்கம் அதிர ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் செய்துள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் படம் என்றால் அமீர் கான் கட்டாயம் நடிப்பார் என்று தெரிந்துதான் காய் நகர்த்தி உள்ளார் போலயே எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

ஒரே ரத்தம்: படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஒவ்வொருவரின் கெட்டப் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என விமர்சித்து வருகிறார்கள். படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. டிரைலரைப் பார்க்கும்போதே நன்றாக தெரிகிறது படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து என்று எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











