அமீர்கானின் 16 வருட திருமண பாலிசி.. அடுத்த 16 வருஷம் இவங்களா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!
மும்பை: நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளனர்.
இந்த தம்பதியினரின் வாரிசான மகன் ஆசாத்தை இருவரும் இணைந்து பார்த்துக் கொள்ளப் போவதாகவும், தொடர்ந்து தயாரிப்பு பணிகளிலும் இணைந்து ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
16 ஆண்டுகால இடைவெளியில் இரு முறை அமீர்கான் விவாகரத்து செய்துள்ளார் என்றும், அடுத்த மனைவி இவர்தானா என்றும் அமீர்கானை ஹாஷ்டேக் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

2000 கோடி வசூல்
பாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி பாகுபலி படம் 1500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், மற்ற கான் நடிகர்களால் அதை சமாளிக்க முடியாத போது தங்கல் எனும் தரமான படத்தை இறக்கி 2000 கோடி வசூலை ஈட்டி பாலிவுட்டின் மானத்தை காப்பாற்றியவர் நடிகர் அமீர்கான்.

முதல் மனைவி
நடிகர் அமீர்கானின் பக்கத்து வீட்டுக்காரப் பெண்ணான ரீனா தத்தாதை 1986ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் அமீர்கான். 2002ம் ஆண்டு சரியாக 16 ஆண்டுகால இடைவெளியில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோரான நிலையில் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து குடும்ப வாழ்க்கையில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் அமீர்கான்.

உதவி இயக்குநர்
2001ம் ஆண்டு வெளியான லகான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ் மீது ஏற்பட்ட காதல் காரணமாகத் தான் முதல் மனைவியை அமீர்கான் விவாகரத்து செய்தார் என்ற தகவல்களும் அப்பவே வெளியாகின. 2002ம் ஆண்டு முதல் மனைவியை விவாகரத்து செய்த அமீர்கான் சில ஆண்டுகள் கிரண் உடன் லிவ்வின் டுகெதராக வாழ்ந்து விட்டு 2005ல் திருமணம் செய்து கொண்டார்.

16 ஆண்டுகால பாலிசி
பிரியமானவளே படத்தில் விஜய்க்கும் சிம்ரனுக்கும் இடையே ஒரு வருட திருமண பாலிசி இருப்பது போல, அமீர்கானுக்கு 16 ஆண்டுகால திருமண பாலிசி உள்ளதா என நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவியை 16 ஆண்டுகால இடைவெளியில் அமீர்கான் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த ஹீரோயினா
தங்கல் படத்தில் தனது மகளாக நடித்த நடிகை ஃபாத்திமா சனா சேக் தான் அடுத்த 16 ஆண்டுகால மனைவியா? என்கிற ரீதியில் #FatimaSanaShaikh என்ற ஹாஷ்டேக்கையே போட்டு பாலிவுட் ரசிகர்கள் பகிரங்கமாக கலாய்த்து வருகின்றனர். தங்கல் படத்தைத் தொடர்ந்து அமீர்கான் நடித்த தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











